என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- ஜெயிலில் அடைப்பு
- கலெக்டர் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டம் சாத்கர், கோட்டை காலனியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் சுந்தரராஜ் (வயது 47). அதே பகுதி சேர்ந்தவர் பசுபதி.
இவர்கள் 2 பேரும் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டதால் போலீசார் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின் பேரில் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Next Story






