search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா, சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    கஞ்சா, சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    • திருவண்ணாமலை, போளூர் பகுதியில் தொடர்ந்து குற்ற செயல்கள் அதிகரிப்பு
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த பூமந்தகுளம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் இவரது மனைவி ஜான்சி (வயது 48) இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போதும், திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் மனைவி மங்கை (42) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் 2 பேரையும் திருவண்ணாமலை டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாலாஜி (23) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் நகரம் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் (37) என்பவர் திருவண்ணாமலை கருமாரப்பட்டி ஏரிக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவர்கள் 5 பேரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஜான்சி, மங்கை, பாலாஜி, பாலமுருகன், குமார் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×