பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை வேலூர் ஜெயிலில் அடைப்பு
பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
Published on

வேலூர்:

வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ். மானியம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 25).பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

நிர்மல் தொடர்ந்து வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு வந்தார். அவரை வேலூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி நிர்மல் குண்டர்சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com