search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் விநியோகம்"

    • பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி, கங்கலேரி ஊராட்சி மற்றும் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    2022-23ம் நிதியாண்டில் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள், ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் 50 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், ஓசூர் ஒன்றியம் தேவேரிப்பள்ளி மற்றும் 23 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், நாகொண்டப்பள்ளி மற்றும் 27 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,

    கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்ைட மற்றும் 28 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், பர்கூர் ஒன்றியம் சிகரலப்பள்ளி மற்றும் 143 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், கிருஷ்ணகிரி ஒன்றியம் வெலகலஹள்ளி மற்றும் 39 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் என மொத்தம் 2022-23ம் நிதியாண்டில் ரூ.122 கோடி மதிப்பில் 7 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் எடுக்கப்பட்டு, 6 பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) அலுவலர்களுடன் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனாகார்க் உதவி பொறியாளர்கள் சாந்தி, கலைபிரியா, ரகோத்சிங், துணை நிலநீர் வல்லுநர்கள் கல்யாணராமன், ராதிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தலைமைக் குடிநீா் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பழுதடைந்துள்ளன.
    • பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    உடுமலை : 

    உடுமலை நகரில் நாளை 21,நாளை மறுநாள் 22 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,உடுமலை நகராட்சி திருமூா்த்தி நகா் தலைமைக் குடிநீா் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பழுதடைந்துள்ளன. ஆகையால், புதிய மின் உந்துகள் பொறுத்தப்படுவதாலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் உடுமலை நகரம் முழுவதும் 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரில் 2-வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை 30-ந்தேதி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலம் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், வரும் திங்கள்கிழமைமுதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தற்போது குடிநீர் சுத்திகரி நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த சில தினங்களாக அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பூதப்பாடி, பூனாச்சி குருவ ரெட்டியூர், சென்னம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள கோம்பூர் பகுதி கரையில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோம்பூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின் அங்கிருந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது குடிநீர் சுத்திகரி நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    மேலும் வெள்ளம் வெளியேரிய பிறகு அதனை சுத்தப்படுத்தி தண்ணீரை சுத்திகரிக்க மீண்டும் சில நாட்கள் ஆகும்.

    இது மாதிரியான காலங்களில் இருந்து பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேடான பகுதியில் அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அதுவரை பொதுமக்களின் அவ்வப்போதையை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தர நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    • குடிநீரை காய்ச்சி பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • அதிகப்படியான நீா்க்கசிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

    உடுமலை:

    உடுமலை நகரில் நாளை 19, 20 ஆகிய 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து உடுமலை நகராட்சி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    உடுமலை நகராட்சியின் திருமூா்த்தி நகா் தலைமைக் குடிநீா் பணியிட நீரேற்று நிலைய இரண்டாவது குடிநீா்த்திட்ட பிரதானக்குழாய்களில் உடைப்பு மற்றும் அதிகப்படியான நீா்க்கசிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் உடுமலை நகரம் முழுவதும் நாளை 19, 20 ந் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை) குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும், குடிநீரை காய்ச்சி பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

    • மேலசெம்மங்குடி கிராமத்தில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பெண்கள் சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், மேலசெம்மங்குடி கிராமத்தை சேர்ந்த கிராமவாசிகளுக்கு ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து மேலசெம்மங்குடி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் பாபநாசம்- சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மெலட்டூர் அருகே கிராமமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டைஒன்றியம், சுரைக்காயூர் வடக்கு த்தெருவாசிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரியவருகிறது. குடிநீர் வினியோகம் குறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மெலட்டூர் அருகே கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிரு ஷ்ணன், தனிப்பி ரிவு ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்ட குழுவினர் சுரைக்காயூர் வடக்குத்தெரு பகுதியில் உள்ள குடிநீர் பம்புகள் செயல்படவில்லை எனவும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து வகையில் தொங்கிய நிலையில் மின்கம்பிகள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யாததால் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தண்ணீர் கிடைக்கவும், தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்கனும் என தெரிவித்தனர். காவல் துறையினர் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைதொடர்ந்து சாலை மறியல் போரா ட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக மெலட்டூர்- திருக்கருகாவூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×