search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "due to inundation of"

    • தற்போது குடிநீர் சுத்திகரி நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த சில தினங்களாக அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பூதப்பாடி, பூனாச்சி குருவ ரெட்டியூர், சென்னம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள கோம்பூர் பகுதி கரையில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோம்பூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின் அங்கிருந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது குடிநீர் சுத்திகரி நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    மேலும் வெள்ளம் வெளியேரிய பிறகு அதனை சுத்தப்படுத்தி தண்ணீரை சுத்திகரிக்க மீண்டும் சில நாட்கள் ஆகும்.

    இது மாதிரியான காலங்களில் இருந்து பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேடான பகுதியில் அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அதுவரை பொதுமக்களின் அவ்வப்போதையை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தர நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    ×