search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிம் ஜாங் உன்"

    • கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
    • புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சியோல்:

    அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா தற்போது கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.

    இந்த மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரியா தீபகற்ப பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.

    கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன் அணுசக்தி போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.

    தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வடகொரியா நடத்தி இருக்கும் இந்த புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார்.
    • பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது

    உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்படும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் உலக தொழில்நுட்பத்தை அறியாத மக்களாக உள்ளனர்.

    இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். கிம் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட கொரிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள் உள்ளனர்.

    வடகொரிய தலைவர் கிம்மின் மூன்று குழந்தைகளில் இந்த மகளை மட்டுமே அவர் பொதுவெளியில் காட்டியிருக்கிறார். கிம் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    • வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • இதில் அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளுடன் கலந்து கொண்டார்.

    பியாங்யாங்:

    வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்தப் பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், ராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

    இந்த ராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
    • குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,

    பியாங்யாங்:

    சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.

    இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

    • வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம்.
    • நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு காரணம்.

    சியோல்:

    உலகை அச்சுறுத்திய கொரோனா, வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    வடகொரியாவில் கொரோனா நோயினை அங்குள்ள சுகாதாரத்துறையினர், சாதாரண காய்ச்சல் என்றே பதிவு செய்தனர். இதனால் இங்கு கொரோனா இறப்பு குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் கடந்த மே மாதம் இங்கு ஒமைக்ரான் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தலைநகர் பியோங்யாங்கில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த வடகொரியாவின் சுகாதாரத்துறையினர், நோய் தடுப்பு விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

    இதில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம்.

    இதற்கு காரணமானவர்களை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் சுகாதார பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார்.

    வடகொரியா உடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் தங்களால் வர்த்தக தடைக்கு உள்ளான சீனா குறுக்கே நிற்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். #Trump #NorthKorea #China
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது. வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்தது. வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    சமீபத்தில், பியாங்யாங் நகரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் வலதுகரமாக விளங்கிவரும் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் அந்நாடின் உயரதிகாரிகளுடன் தொடர்ந்து இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ, அங்கிருந்து இன்று ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    அவர் புறப்பட்டு சென்ற பின்னர் வடகொரியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ’இருநாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் சார்பில் முன்வைக்கப்பட்ட நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், கடைபிடித்த பாணியும் மிகவும் வருத்தம் அளிக்கும் மனப்போக்குடன் அமைந்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்ற வேண்டுமானால் அதற்கான திட்டமிட்ட அணுகுமுறைகளை இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கையாள்வதுதான் வேகமான வழியாக அமையும்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.



    இருப்பினும், அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை வடகொரியா மதித்து நடந்து கொள்ளும் அதிலுள்ள ஷரத்துகளை நிறைவேற்றும் என இன்னும் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை மதித்து கவுரவிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், குறிப்பாக எங்கள் கைக்குலுக்கலை அவர் மறக்க மாட்டார். அதே வேளையில், இந்த ஒப்பந்தத்தின் மீது அமெரிக்காவால் வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ள சீனா ஆதிக்கம் செலுத்தும் என கருதுகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு வேலைக்கு ஆகாது என டிரம்ப் கூறியுள்ளார். #TrumpKimSubmit
    வாஷிங்டன்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.



    இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இல் உடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்கும். இப்போது அது நடக்கவில்லை என்றாலும், சில காலத்திற்கு பின்னர் நடக்கலாம். சிங்கப்பூர் சந்திப்பு வேலைக்கு ஆகாது என்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் இது வேலை செய்யாது என்பதல்ல. ஆனால், ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது.

    என தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக இது தொடர்பாக பேசிய டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கடுமையாக சாடியிருந்தார். சீனா இந்த சிங்கப்பூர் சந்திப்பு நடக்க கூடாது என நினைத்து வடகொரியாவை மடை மாற்றியிருக்கலாம் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு அடுத்த மாதம் நடக்க திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென இதில் இருந்து வடகொரியா பின் வாங்க முயன்று வருகிறது. #TrumpKimSubmit
    வாஷிங்டன்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    கிம் ஜாங் அன்

    இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக டிரம்ப் தெரிவிக்கையில், “பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அது நடக்கலாம். நடக்காமல் போகலாம். எப்படி இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர வேண்டும்” என தெரிவித்தார்.

    மேலும், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த பிறகே கிம் இப்படி மாறியுள்ளதாக கூறிய டிரம்ப், சீனா இந்த சிங்கப்பூர் சந்திப்பு நடக்க கூடாது என நினைத்து மடைமாற்றியிருக்கலாம் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    அணு ஆயுதங்களை கைவிட்டால் வடகொரியாவை தொடர்ந்து கிம் ஆள டிரம்ப் ஒத்துழைப்பார் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா உள்நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி லிபியாவில் கடாபிக்கு நேர்ந்ததை போல தனக்கும் நேர்ந்து விடுமோ என நினைத்த கிம் அமெரிக்கா உடன் ஒத்துழைக்காமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    ×