search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "singapore sumbit"

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு வேலைக்கு ஆகாது என டிரம்ப் கூறியுள்ளார். #TrumpKimSubmit
    வாஷிங்டன்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.



    இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இல் உடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்கும். இப்போது அது நடக்கவில்லை என்றாலும், சில காலத்திற்கு பின்னர் நடக்கலாம். சிங்கப்பூர் சந்திப்பு வேலைக்கு ஆகாது என்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் இது வேலை செய்யாது என்பதல்ல. ஆனால், ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது.

    என தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக இது தொடர்பாக பேசிய டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கடுமையாக சாடியிருந்தார். சீனா இந்த சிங்கப்பூர் சந்திப்பு நடக்க கூடாது என நினைத்து வடகொரியாவை மடை மாற்றியிருக்கலாம் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு அடுத்த மாதம் நடக்க திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென இதில் இருந்து வடகொரியா பின் வாங்க முயன்று வருகிறது. #TrumpKimSubmit
    வாஷிங்டன்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    கிம் ஜாங் அன்

    இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக டிரம்ப் தெரிவிக்கையில், “பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அது நடக்கலாம். நடக்காமல் போகலாம். எப்படி இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர வேண்டும்” என தெரிவித்தார்.

    மேலும், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த பிறகே கிம் இப்படி மாறியுள்ளதாக கூறிய டிரம்ப், சீனா இந்த சிங்கப்பூர் சந்திப்பு நடக்க கூடாது என நினைத்து மடைமாற்றியிருக்கலாம் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    அணு ஆயுதங்களை கைவிட்டால் வடகொரியாவை தொடர்ந்து கிம் ஆள டிரம்ப் ஒத்துழைப்பார் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா உள்நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி லிபியாவில் கடாபிக்கு நேர்ந்ததை போல தனக்கும் நேர்ந்து விடுமோ என நினைத்த கிம் அமெரிக்கா உடன் ஒத்துழைக்காமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    ×