என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்

கொரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியாவுக்கு அமோக வெற்றி- அதிபர் கிம் ஜாங் உன் தகவல்

- வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம்.
- நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு காரணம்.
சியோல்:
உலகை அச்சுறுத்திய கொரோனா, வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வடகொரியாவில் கொரோனா நோயினை அங்குள்ள சுகாதாரத்துறையினர், சாதாரண காய்ச்சல் என்றே பதிவு செய்தனர். இதனால் இங்கு கொரோனா இறப்பு குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் இங்கு ஒமைக்ரான் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தலைநகர் பியோங்யாங்கில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த வடகொரியாவின் சுகாதாரத்துறையினர், நோய் தடுப்பு விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.
இதில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம்.
இதற்கு காரணமானவர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் சுகாதார பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார்.