search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலபைரவர் கோவில்"

    • 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை
    • சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார்.

    சிவனின் மறு அவதாரமாக இருக்கக் கூடியது தான் சொர்ண ஆகர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கால பைரவரின் சன்னதியானது சிறிய அளவில் தெற்குநோக்கி அமைந்திருக்கும் ஈரோடு மாவட்டம், காங்கேயம் மெயின் ரோடு, அவல்பூந்துறை இராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி கால பைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.

    கோவிலின் நுழைவாயிலில் ராஜகோபுரம் இருப்பது போல் உலகின் மிகவும் பிரம்மாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை உருவாகியுள்ளது. அவர் வழியாகத்தான் ஆலயத்தில் உள்ளே செல்ல வேண்டும். சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார் என்பது நம்பிக்கை. பைரவரின் வாகனம் நாய். காலபைரவரின் பின்னால் பிரம்மாண்டமான நாய் உருவம் உள்ளது.

    பொதுவாக சிவாலயங்களில் தெற்குப் புறமாக சிறிதாக இரண்டு அடி உயரத்தில் ஒரு கால பைரவர் சிலை இருக்கும். ஆனால் பைரவருக்கு முதன்மையாக இவ்வளவு பெரிய ஆலயமும் மிகப்பெரிய சிலையும் உருவாகி உள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக்கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,

    இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கே 650 கிலோ எடையுள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சிலை ஒன்று உள்ளது. இது முழுக்க ஐம்பொன்னால் ஆனது. அதை வணங்குபவர்களுக்குப் பலன்களும் வளங்களும் கிடைத்து வருகின்றன.

    கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருக்கும் பைரவர் சிலையினை பொதுமக்கள் தொட்டு வணங்கலாம். தாங்களே எல்லா விதமான அர்ச்சனைகளையும் அபிஷேகங்களையும் மக்கள் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. அந்த வகையில் பொது மக்களின் ஆலயமாக சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக் கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.

    அமைவிடம்

    பைரவ பீடம் ( பைரவர் கோவில் ) ஈரோடு - காங்கேயம் மெயின் ரோடு, இராட்டைசுற்றிபாளையம், அவல்பூந்துறை - 638115 ஈரோடு.

    • பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
    • தொடர்ந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தட்சணகாசி காசி காலபைரவர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் மாத மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று ஸ்ரீ தட்சிணகாசி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் ராஜ அலங்காரமும் நடைபெறும்.

    இதனைக்காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அதேபோல் இன்று திங்கட்கிழமை ஆணி மாதம் 25ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி என்பதால் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம் ஏகாந்த ருத்ர ஹோமம், காலை 8 மணிக்கு கோ பூஜை அஸ்தவ பூஜை, காலை 8.30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி கோவிலை வலம் வருதல், பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இன்று இரவு 10 மணிக்கு 1008 கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடக்கிறது. 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை, இரவு 2.30 மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் கோவிலை வலம் வருதல், அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

    கலச அபிஷேகம் 8 வகையான பல அபிஷேகங்கள் நடைபெறும். சுவாமிக்கு சத்ரு சம்ஹாரம் அலங்காரம் செய்யப்படும். சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் நடைபெறும்.

    • இது என்னுடைய சொந்த பட்டா நிலம் என கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.
    • திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நேற்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழைமை யான காசிக்கு அடுத்த படியாக காலபைரவருக்கு என்று தனி ஆலயம் அமைக்கப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக விளங்கி வருகிறது.

    இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் காலபைரவர் ஜெயந்தி நாட்களில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மிளகாய் யாகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவதால் இதில் கலந்து கொண்டு காலபைரவர் அருள் பெற தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் கோவிலின் வளர்ச்சியும் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

    மேலும் இந்து அறநிலை துறைக்கும் அதிக அளவில் வருவாய் வரும் கோவில்களில் தருமபுரி மாவட்டத்தில் முதன்மையான கோவிலாக காலபைரவர் கோவில் திகழ்ந்து வருகிறது.

    மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டது முதல் பல்வேறு பெருமைகளை பெற்றுள்ள காலபைரவர் கோவிலுக்கு இன்று திடீரென தனி நபர் ஒருவர் தன்னுடைய பட்டா நிலத்தில் கோவில் சுற்றுவட்டார கிரிவலப் பாதைகள் மற்றும் தீபம் ஏற்றும் பகுதிகள் அமைந்துள்ளது.

    இது என்னுடைய சொந்த பட்டா நிலம் என கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.

    மற்ற இடங்களில் கோவிலுக்கு சொந்தமான தீபம் ஏற்றும் இரும்பு தளவாடங்களைக் எடுத்து கொண்டும் பக்தர்கள் வலம் வரும் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு அடைத்துள்ளனர்.

    திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நேற்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கும் பொழுது மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்கள் பெரும்பாலும் அதிக அளவு சுற்றுவட்டார இட வசதிகளுடன் வைத்து தான் அமைக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கோவிலுக்கு இடம் இல்லாத வகையில் அமைக்க வாய்ப்புகளே இல்லை.

    அவ்வாறு இருக்கும் இடத்தில் மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சொந்தமான முந்தைய ஆவணங்களை ஆய்வு செய்யும் போது கோவில் ஆக்கிரமிப்புகள் இதுபோன்ற சிக்கல்கள் முழுமையாக தீரும் என தெரிவிக்கின்றனர்.

    மேலும் இந்த சிக்கல் தொடர்பாக உடனடியாக இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என்றும் பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் இந்து அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் ஜீவானந்தம் கோவில் இடத்தை ஒட்டி முள் கம்பி வேலிகள் அமைத்தது தவறு. உரிய இடைவெளி விட்டு அமைத்து இருக்க வேண்டும். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • 1,008 கிலோ மிளகாய் மூலம் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.
    • பகல், 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    அதிகாலை முதல் 108 வகையான நறுமண பொருட்கள், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் பழங்களால் சாமி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகள், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. மேலும் உபகார பூஜைகள் செய்யப்பட்டன.

    இதையொட்டி காலபைரவர் ராஜ அலங்காரத்தில் பக்த ர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.

    இந்த சிறப்பு பூஜையில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் அவர்கள் பூசணியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு கோவிலில் 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் மூலம் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய த்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.



    ×