search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalabhairava Temple"

    • 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை
    • சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார்.

    சிவனின் மறு அவதாரமாக இருக்கக் கூடியது தான் சொர்ண ஆகர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கால பைரவரின் சன்னதியானது சிறிய அளவில் தெற்குநோக்கி அமைந்திருக்கும் ஈரோடு மாவட்டம், காங்கேயம் மெயின் ரோடு, அவல்பூந்துறை இராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி கால பைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.

    கோவிலின் நுழைவாயிலில் ராஜகோபுரம் இருப்பது போல் உலகின் மிகவும் பிரம்மாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை உருவாகியுள்ளது. அவர் வழியாகத்தான் ஆலயத்தில் உள்ளே செல்ல வேண்டும். சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார் என்பது நம்பிக்கை. பைரவரின் வாகனம் நாய். காலபைரவரின் பின்னால் பிரம்மாண்டமான நாய் உருவம் உள்ளது.

    பொதுவாக சிவாலயங்களில் தெற்குப் புறமாக சிறிதாக இரண்டு அடி உயரத்தில் ஒரு கால பைரவர் சிலை இருக்கும். ஆனால் பைரவருக்கு முதன்மையாக இவ்வளவு பெரிய ஆலயமும் மிகப்பெரிய சிலையும் உருவாகி உள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக்கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,

    இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கே 650 கிலோ எடையுள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சிலை ஒன்று உள்ளது. இது முழுக்க ஐம்பொன்னால் ஆனது. அதை வணங்குபவர்களுக்குப் பலன்களும் வளங்களும் கிடைத்து வருகின்றன.

    கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருக்கும் பைரவர் சிலையினை பொதுமக்கள் தொட்டு வணங்கலாம். தாங்களே எல்லா விதமான அர்ச்சனைகளையும் அபிஷேகங்களையும் மக்கள் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. அந்த வகையில் பொது மக்களின் ஆலயமாக சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக் கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.

    அமைவிடம்

    பைரவ பீடம் ( பைரவர் கோவில் ) ஈரோடு - காங்கேயம் மெயின் ரோடு, இராட்டைசுற்றிபாளையம், அவல்பூந்துறை - 638115 ஈரோடு.

    ×