search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயல்பட்டினம்"

    • சதாம் உசேன் மீது கஞ்சா வழக்குகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • சதாம் உசேன் தண்டனை காலம் முடிந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது மனைவியும் குழந்தைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது31). இவரது மனைவி பரக்கத் நிஷா (29). இவர்களுக்கு ஜாபர் சாதிக், ஷேக் அலாவுதீன் என்ற மகன்களும், வாபியா என்ற மகளும் உள்ளனர்.

    மாயம்

    சதாம் உசேன் மீது கஞ்சா வழக்குகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தண்டனை காலம் முடிவுற்ற நிலையில் கடந்த 9-ந்தேதி விடுதலை ஆனார். அன்று மாலை சதாம் உசேன் காயல்பட்டினத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

    தனது மனைவியும் குழந்தைகளும் எங்கே சென்று இருப்பார்களோ என்று நினைத்த சதாம் உசேன் இது பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அதற்கு பலரும், கடந்த 3 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் எங்கே சென்றனர் என்பது எங்களுக்கு தெரியவில்லை, என்று கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சதாம் உசேன் பல இடங்களில் தேடியும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் இது பற்றி அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்

    காயல்பட்டினம் பாஸ் நகரைச் சேர்ந்தவர் ரூபன் (வயது34), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துச்செல்வி (26). இவர்களுக்கு விக்டர் (9), அந்தோணி (7) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 17-ந்தேதி ரூபன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். மாலையில் திரும்பி வந்தபோது வீடு பூட்டிக் கிடந்தது.

    நீண்ட நேரம் ஆகியும் அவரது மனைவியும் குழந்தைகளும் வரவில்லை. இதனால் ரூபன் அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அப்போது முத்துச்செல்வி, தனது குழந்தைகள் இருவரையும் அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு தான் வீரபாண்டியன்பட்டி னத்திற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

    இதன் பின் ரூபன் தனது உறவினர்களுடன் பல இடங்களில் தேடியும் முத்து செல்வியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழுகை ஜெய்லானி நகரில் நடைபெற்றது.
    • பெருநாள் உரையை மஹ்மூது இத்ரீஸ் நிகழ்த்தினார்.

    ஆறுமுகநேரி:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் தவ்ஹீத் ஜும்மா பள்ளியின் இமாம் அப்துல் சமது தொழுகையை நடத்தினார். தூத்துக்குடி மாவட்ட பேச்சாளர் கழிமுதீன் பைஜ் இப்ராஹிம்ர். தொழுகையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழுகை ஜெய்லானி நகரில் நடைபெற்றது.தவ்ஹீத் பேரவை பள்ளிவாசல் இமாம் சூபி ஹுசைன் சிறப்பு தொழுகையை நடத்தினார். பெருநாள் உரையை மஹ்மூது இத்ரீஸ் நிகழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் தலைவர் முத்து ஹனீபா, செயலாளர் நைனா முகமது, பொருளாளர் ரய்யான் சாகுல் ஹமீது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • பள்ளிக்கு சென்ற முத்துரோஷன் சைக்கிளில் வீட்டிற்கு வரும்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.
    • விபத்தில் காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் முத்து ரோசனின் வலது கால் சிதைந்து அவன் அலறி துடித்தான்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தில் வசித்து வருபவர் ராம்குமார் (64). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்து ரோஷன் (வயது 11). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற முத்துரோஷன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கோமான் மேலத்தெருவில் வரும்போது பின்னால் வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் முத்து ரோசனின் வலது கால் சிதைந்தது. அவன் அலறி துடித்தான். உடனே அக்கம் பக்கத்தினர் அவனை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை ராம்குமார் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த முகமது பாசில் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துலட்சுமி தெரு தெருவாக சென்று இட்லி வியாபாரம் செய்து வந்தார்.
    • காலையில் இட்லி விற்க சென்ற முத்துலட்சுமி மாலையில் மிகவும் தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சேதுராஜா தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). பிளம்பர்.

    இட்லி வியாபாரம்

    இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். முத்துலட்சுமி தெரு தெருவாக சென்று இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இட்லி வியாபாரத்திற்கு சென்று வந்துள்ளார். இதனால் அவரது மகனும், மகளும், இப்படிப்பட்ட நிலையில் ஏன் வியாபாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

    விஷம் மருந்து தின்றார்

    இருந்தபோதும் முத்துலட்சுமி தொடர்ந்து இட்லி விற்க சென்றுள்ளார். கடந்த 6-ந் தேதி காலையில் இட்லி விற்க சென்றவர் மாலையில் மிகவும் தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது அவரது கணவர், எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துலட்சுமி, நான் இத்தனை நாள் இட்லி வியாபாரம் செய்து உழைத்து வந்தேன்.

    இப்போது நோய்வாய்ப்பட்டு யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் காலையிலேயே விஷ மருந்தை தின்றுவிட்டு தான் இட்லி விற்க சென்றேன்.

    இப்போது எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் உடனடியாக முத்துலட்சுமியை காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரிதாப சாவு

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்ததான முகாமில் 5 பெண்கள் உள்பட 55 பேர் ரத்ததானம் செய்தனர்.
    • 61-வது முறையாக ரத்ததானம் வழங்கிய முகமது தம்பி என்பவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளா கத்தில் மக்கள் உரிமை நிலை நாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து நடந்த இந்த முகாமில் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் புகாரி ஷாஜகான் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    முகாமில் 5 பெண்கள் உள்பட 55 பேர் ரத்ததானம் செய்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை டாக்டர் சசிகலா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் 61-வது முறையாக ரத்ததானம் வழங்கிய காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சேர்ந்த முகமது தம்பி என்பவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். அவருக்கான சான்றிதழை டாக்டர் புகாரி வழங்கினார்.

    முகாமிற்கான ஏற்பாடு களை மெகா அமைப்பின் நிர்வாகிகள் புகாரி, மெகா நூஹு, ஹாரூன் ரசீது, சாலிஹ், முத்து இஸ்மாயில், ஹாமித் ரிபாய், முஜாஹித் அலி, ஜபருல்லா, அப்துல் ஹமீது உள்பட பலர் செய்திருந்தனர்.

    ×