search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் கடிதம்"

    பாகிஸ்தான் தேசியநாளையொட்டி இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் அந்நாட்டுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை நிறுத்துங்கள் என காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. #PMModi #loveletters #Congress
    புதுடெல்லி:

    லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23-ந்தேதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது.
     
    அதைதொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், ‘‘தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    துணை கண்டத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இன்றி ஜனநாயகம், அமைதி மற்றும் செல்வசெழிப்புடன் மக்கள் இணைந்து வாழும் நேரம் இது’’ என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அந்நாட்டுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை நிறுத்துங்கள் என பிரதமர் மோடியை காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.



    இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதத்தை பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல் பாகிஸ்தான் பிரதமருக்கு நமது 56 அங்குலம் மார்புக்காரர் (மோடி) வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

    அவரது புஜபலம் மற்றும் அழுகாச்சி நாடகம் இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களுக்கு மட்டும்தான். பாகிஸ்தானுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு முன்னர் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எல்லைப்பகுதி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு முன்னர் கடிதங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்து வந்தபோது ‘காதல் கடிதங்கள் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்’ என்று மோடி விமர்சித்து வந்தது நினைவிருக்கலாம்.  #PMModi #loveletters #Congress
    திருப்பூரில் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவன் போலீஸ் விசாரணைக்கு பயந்து வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர், மாணவியை தொடர்ந்து வந்துள்ளார்.

    திடீரென மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த மாணவர் தொடர்ந்து மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவனை அழைத்து எச்சரித்து உள்ளனர்.

    இன்று விசாரணைக்கு வரும்படி மாணவரிடம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த மாணவர் அவமானத்தில் சாணிப்பவுடரை குடித்து விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ×