search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டெருமைகள்"

    • ஏற்காடு டவுண் பகுதியில் குடிநீர் தட்டுபாடு அதிகமாக உள்ளது.
    • காபி செடிகளுக்கு இடையே காட்டெருமைகள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தும் வருகிறது.

    ஏற்காடு:

    ஏற்காட்டிற்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ஏரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளது.

    இங்குள்ள மலை பகுதியில் வானுயுர்ந்த மரங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் காபி, ஆரஞ்சு, மிளகு, அத்தி பழம், ஆட்டுக்கால் கிழங்கு, மலை வாழை உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது.

    குறிப்பாக ஏற்காடு தட்டவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளதால் இங்கு காட்டெருமைகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. இந்த காட்டெருமைகள் சில சமயங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து காட்டெருமை 2 பேரை தாக்கியது.

    இந்நிலையில் தற்போது இரவு நேரங்களில் அதிக பனிபொழிவும் பகல் நேரங்களில் அதிக வெயிலும் காணப்படுகிறது. மேலும் கோடைகாலத்திற்கு முன்பாகவே ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

    மேலும் ஏற்காடு டவுண் பகுதியில் குடிநீர் தட்டுபாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் குடிருப்பு பகுதிகளில் படையெடுக்க தொடங்கியுள்ளது. காபி தோட்டங்களில் காபி செடிகளுக்கு இடையே காட்டெருமைகள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தும் வருகிறது. இதனல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • காட்டெருமைகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
    • 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமைகள், அருகேயுள்ள வனப்பகுதிக்குள் திரும்பி சென்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி, குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. அப்படி உலா வரும் காட்டெருமைகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகிறார்கள்.

    குன்னூரில் இருந்து கரோலினா கிராமத்திற்கு ஒரு சாலை செல்கிறது. அந்த சாலையில் நேற்று மாலை வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அப்போது வனத்தை விட்டு வெளியேறி 3 காட்டெருமைகள் ஊருக்குள் வந்தன. சாலையின் நடுவே நடந்து சென்ற காட்டெருமைகள் திடீரென ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.

    2 மணி நேரத்திற்கும் மேலாக காட்டெருமைகள் அங்கிருந்து நகராமல் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைந்தனர்.

    இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையில் நின்று சண்டையிட்ட காட்டெருமைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் அவை தங்களுக்குள் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை நிறுத்தாமல் அங்கேயே நின்றன. மேலும் வனத்துறையினரின் வாகனத்தையும், அங்கு நின்றிருந்தவர்களையும் நோக்கி ஒரு காட்டெருமை ஓடி வந்து துரத்தியது.

    இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஒடி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமைகள், அருகேயுள்ள வனப்பகுதிக்குள் திரும்பி சென்றன. அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து இயல்புநிலைக்கு வந்தது.

    கொரோனா பாதிப்பை தொடர்ந்து கரோலினா கிராமத்துக்கு பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்தே சென்று வருகின்றனர். கரோலினா கிராமத்துக்கு மீண்டும் பஸ்களை இயக்குவதுடன், காட்டெருமைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன.
    • 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன.

    கோத்தகிரி

    கோத்தகிரி நகர் பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களிலும் உலா வருகின்றன.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் வந்து முகாமிட்டு உள்ளன. குறிப்பாக வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும், தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். இவ்வாறு உலா வரும் காட்டெருமைகளால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அங்கு வசிக்கும் காட்டெருமைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன.
    • ஏற்காடு முளுவி கிராமம் செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று ஹாயாக நடந்து சென்றது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஏற்காடு பிரதானமாக விளங்குகிறது. இங்குள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டெருமைகள், மான், நரி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் தேடி மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருகின்றன.

    தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அங்கு வசிக்கும் காட்டெருமைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    நேற்று ஏற்காடு முளுவி கிராமம் செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று ஹாயாக நடந்து சென்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்காடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கோத்தகிரி பகுதியில் மக்கள் கூடும் முக்கியமான பகுதிகளில் கடந்த சில நாட்களாக 4 காட்டெருமைகள் சேர்ந்த கூட்டம் ஒன்று பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வலம் வருகிறது.

    வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளை போன்று இவைகள் சாலைகளில் சுற்றி திரிவது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று காலை நேரத்தில் 4 காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து நீண்ட நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்து காட்டெருமைகள் கூட்டம் நகர்ந்து சென்ற பின்பு போக்குவரத்து சீரானது. எனவே காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
    • நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேலும் வனவிலங்குகள் அனைத்தும் தற்போது வனப்பகுதியை விட்டு மக்கள் வசிக்கக்கூடிய நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை ஜான் ஸ்கொயர் சத்யா பர்னிச்சர் பகுதியில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் சென்றனர்.இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காட்டெருமைகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி லுக் சர்ச் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2 காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன. திடீரென 2 காட்டெருமைகளும் சண்டையிட்டு கொண்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெகுநேரமாக சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது எனவும், நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் வனவிலங்குகள் தானாகவே சென்றுவிடும் என அறிவுரை கூறினர்.

    • வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.
    • பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் கூடும் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. இதில் குறிப்பாக காட்டெருமைகள் மற்றும் கரடிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் நேற்று மாலை காட்டெருமை ஒன்று மக்கள் நடமாடும் பகுதிக்குள் புகுந்தது.

    உடனடியாக அங்கிருந்த மக்கள் காட்டெருமை வருவதை கண்டு விலகி சென்றுவிட்டனர். பின்பு அந்த காட்டெருமை அருகில் இருந்த அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் சென்றது.

    இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.
    • காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது.

    இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.

    இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ஒரு குட்டியும் வந்தது.

    காட்டெருமைகள் மேய்ந்து கொண்டே சென்றன. அப்போது எதிர்பாராத விதமாக காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தது.

    இதனை அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பார்த்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனசரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், விரைந்து வந்தனர்.

    கம்பி வேலியில் சிக்கி தவித்த காட்டெருமை குட்டியை மீட்டு அதற்கு தேவையான பால் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். பின்னர் குட்டியை தாயுடன் சேர்க்க முடிவு செய்து, தேயிலை ேதாட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.அப்போது சிறிது தொலைவில் காட்டெரு மைகள் கூட்டமாக நிற்பதை பார்த்தனர். இதையடுத்து அருகில் கொண்டு காட்டெருமையை குட்டியை விட்டனர். தாயிடம் காட்டெருமை குட்டி சேரும் வரை அங்கு நின்று கண்காணித்தனர்.குட்டி தாயிடம் சேர்ந்து உற்சாகத்துடன் சென்றதை பார்த்து விட்டு வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

    ×