search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள்"

    • தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
    • பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டது

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சி யின் சாதாரண கூட்டம் தலைவர் சுமன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர் கள் கலந்து கொண்டனர்.

    ரூ. 15 லட்சம் செலவில் எலக்ட்ரிக் வேலை மேற்கொள்வது, ரூ.1 கோடி செலவில் மீன் சந்தை புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், கூடுதல் செலவாக ரூ. 50 லட்சம் செய்ய வேண்டும்.

    பஸ்நிலையத்தில் வேகத்தடை உயரத்தை குறைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டன. ஆனால் ஏற்கனவே முடிவு பெற்ற பணிகளுக்கு மீண்டும் செலவு செய்ய இருப்ப தாகவும், மதிப்பீடு செலவு கள் அதிகமாக இருப்ப தாகவும் கூறி மொத்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஜெயசேக ரன், சரவணன், முத்துக் குமார், கவுதமி, சுஜாதா, காங்கிரஸ் கட்சி கவுன்சி லர்கள் பீட்டர் தாஸ், சுகன்யா மற்றும் ஹேமா ஆகிய 8 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    அவர்களுடன் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. மதியம் தொடங்கிய போரா ட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. இது தொடர்பாக இரணியல் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், பேரூராட்சி அலுவலகம் வந்து போரா ட்டத்தில் ஈடுபட்ட கவுன்சி லர்கள் மற்றும் செயல் அலுவலர் எட்வின் ஜோசி டம் தனித்தனியாக பேசினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் கூறும் போது, தீர்மானம் ரத்து செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் கேட்கி றார்கள். நாங்கள் ஓத்தி வைக்கலாம் என்று கூறு கிறோம் என்றார்.

    உள்ளிருப்பு போராட்ட த்தில் ஈடுபட்ட கவுன்சில ர்கள் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் தங்களுக்குள் பேசி முடிவு சொல்கிறோம் என்று கூறினர். தொடர்ந்து பேச்சு வார்த்தை யில் முடிவு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் திங்கள் நகர் பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
    • அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் அருணாச்சலம் பேசுகையில், "தன் வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    மற்றொரு அ.தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தி பேசுகையில், "அனைத்து தெரு விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். தி.மு.க. கவுன்சிலர் வெங்கடேசன் பேசுகையில், "செட்டித்தெரு இருளர் காலனியில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும், அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் கோகுலகிருஷ்ணன் பேசுகையில், "அங்காளம்மன் கோவில் தெருவில் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் திறந்தவெளி கால்வாய்களுக்கு கான்கிரீட் பலகைகளை கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் கோல்டு மணி பேசுகையில், "தன் வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். தி.மு.க. கவுன்சிலர் சுமலதா நரேஷ் பேசும்போது, "தன் வார்டில் கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

    தி.மு.க. உறுப்பினர்கள் திரிபுரசுந்தரி, அபிராமி, இந்துமதி, கல்பனா பார்த்திபன், சமீமாரஹீம் ஆகியோர் பேசும்போது, "தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர். இப்படி அனைத்து வார்டு கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விரைவில் நிறைவேற்றப்படும்

    இதற்கு பதில் அளித்து பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணை தலைவர் குமரவேல் பேசிய தாவது:-

    அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் தமிழ்நாடு அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிதிநிலை சீரடைந்ததும் அரசிடம் கூடுதல் நிதி பெற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முடிவில் பங்கஜம் நன்றி கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

    ஆணையாளர் விஜய் குமார் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பல வாசகங்களுடன் கூடிய தட்டிகளுடன் கூட்ட அரங்கில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளே நுழைந்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் பழனிச்சாமி பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடை பழுதாகி உள்ளதால் கடை உரிமையாளர் கடையை காலி செய்ய சொல்கிறார்.

    வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் நகராட்சி தி.மு.க. உறுப்பினர் ஜேம்ஸ், ரேசன் கடைகளில் ரேகை வைக்கும் பிரச்சனை அனைத்து வார்டுகளில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் தொடர்ந்து துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், அம்பிகா, ரங்கநாதன், வேல்முருகன், பாலசுப்ரமணி, கதிரவன், கோவிந்தராஜ், பரிமளா, மகேஸ்வரி, கிருஷ்ணவேணி, புஷ்பா, தீபா, சுமதி, செல்வி, உள்ளிட்ட பலர் வடிகால் வசதி, வாட்டர் டேங்க் முன் உள்ளமுள்செடிகள் அகற்றுதல், சாலை வசதி, மின் விளக்கு வசதி, சாக்கடை அடைப்பை சரி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதனை தொடர்ந்து சேர்மன் விஜய்கண்ணன் உறுப்பினர்களின் கோரிக்ைக பரிசீலிக்கப்படும் என்றார்.

    முந்தைய கூட்டத்தில் உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • 54 -வதுவார்டில் தொடர்ந்து குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படுகிறது.
    • குறைகளில் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்.

    வீரபாண்டி:

    திருப்பூர் 4ம் மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் தலைமை தாங்கினார்.4-ம் மண்டல உதவி கமிஷனர் செல்வவிநாயகம் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில்:- 54 -வதுவார்டில் தொடர்ந்து குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் 50 துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 16 நபர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் குப்பை துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் புதிய கட்டடங்களுக்கு வரிவசூல் செய்யப்படுவதில்லை .விரைவாக வரி வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

    38-வது வார்டில் தெருவிளக்கு மாதம் இரண்டு முறை பழுதாகி விடுகிறது. அப்பகுதி யில் சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. 39 -வது வார்டு பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் பணிக்காக புலிகள் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தும் இதுவரை மூடப்படவில்லை. மேலும் குடிநீர் குழாய்களும் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

    57-வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் போடப்பட்டுள்ள வேலையானது சரிவர செய்யப்படவில்லை. இதனால் சாலை மேலும் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது என்றனர்.

    இதனைத் தொடர்ந்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

    4-ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் பேசுகையில்:- அனைத்து வார்டுகளிலும் தெரிவிக்கப்பட்ட குறைகளை விரைவாக நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த குறைகளில் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்என்றார்.

    • கட்டிட அளவீடு பணிகளுக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்
    • மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் இன்று கூட்டரங்கில் நடந்தது. மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், நகர் நல அதிகாரி டாக்டர் விஜய் சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மண்டல தலைவர்கள் செல்வக்குமார், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், ஜவகர் கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, டி.ஆர். செல்வம், உதயகுமார், சேகர், அக் ஷயா கண்ணன், ரமேஷ், நவீன் குமார், அய்யப்பன், அனுஷா பிரைட், பால் அகியா கோபால் சுப்பிரமணியன், அனிலா சுகுமாறன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறிய தாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் பிளாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வீடுகளுக்கு வரி நிர்ணயம் செய்ய வீடுகளை தனித்தனியாக அளவீடு செய்து வரு கிறார்கள். வீடுகளை அளவீடு செய்யாமல் தற்போது உள்ளது போல் வரிகளை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடைபெறவில்லை. 4 மாதங்கள் ஆகியும் வார்டுக்கு ஒரு ரூபாய் வரை வேலை செய்யவில்லையே என்று பொதுமக்கள் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள். உடனடியாக பணிகளை செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி வழங்கி வருகிறார்கள். உடனடியாக மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடை களுக்கு லைசன்ஸ் வழங்கு வதில் தற்காலிக ஊழியர்கள் பண வசூல் செய்கிறார்கள் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோட்டார், வடசேரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும். மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் பகுதியில் ரியல் எஸ்டேட்டுக்கு மாநகராட்சி மூலமாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற்ற பிறகே மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். பிளாட்டுகள் அமைப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தற்போது நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    2008-ம்ஆண்டு அதாவது கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதி எந்த மண்டலமாக இருந்ததோ அதே மண்டலமாக தான் தற்போது செயல்படும். மண்டலங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் தான் வரி விதிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 600 சதுரஅடி உள்ள வீடுகளுக்கு 25சதவீதமும் 601 முதல் 1200 சதுர அடி உள்ள வீடுகளுக்கு 50 சதவீதமும் 1201 முதல் 1800 சதுரடி உள்ள வீடுகளுக்கு 75 சதவீதமும் 1801-க்கு மேல் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஆளூர் பேரூராட்சி தற்போது டி மண்டலத்தில் தான் உள்ளது. பொதுமக்கள் மீது வரியை திணிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்பொழுது மாநகர பகுதியில் அரசின் விதி முறைக்கு உட்பட்டு தான் கட்டிடங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்கனவே அனுமதி பெற்ற அளவை விட கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளில் ஆஸ்பத்திரிகளில் பள்ளி கள் கல்லூரிகளில் கூடு தலாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. எனவேதான் அளவீடு செய்து அதற்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இதன் மூலமாக மாநக ராட்சிக்கு வருமானமும் அதிகரிக்கும். வீடுகள் மற்றும் கட்டடங்களை அளவீடு செய்வதற்கு கவுன்சிலர் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். பாரபட்சமின்றி இதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரில் தெரு விளக்குகளை சரி செய்யப்படவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டிய அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை மேற்கொண்டு தற்போது புதிதாக ஒப்பந்தகாரர் மூலமாக தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு வரு கிறது. இதுவரை 90 சதவீத தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள தெருவிளக்குகள் விரைவில் சீரமைக்கப்படும்.

    மாநகராட்சி கவுன்சிலர் களின் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் பிறந்த குழந்தைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மீது உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர் அனை வருக்கும் ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபடும் போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.ஏற்கனவே கடந்த கூட்டத்தில் கவுன்சிலர் விஜிலா ஜஸ்டிஸ் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும் என்று தெரி வித்திருந்தார்.

    ஆனால் இதுவரை மாற்றவில்லை என்று இன்றும் புகார் கூறியுள்ளார். குடிநீர் தொட்டியை மாற்ற நட வடிக்கை எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பணிகள் முடிக்கப்பட்ட காண்ட்ராக்ட்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்று என்னிடமே புகார் கொடுத்துள்ளனர்.

    ரூ.10 கோடி கொடுக்க வேண்டியுள்ளது. முன்னு ரிமை அடிப்படையில் பணம் வந்தவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2 இடங்களில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அந்த பணி கிடப்பில் உள்ளது.மேலும் ரெயில்வே ரோட்டில் செல்லும் சாலையின் ஒரு பகுதி ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது மற்றொரு பகுதி மாநகராட்சிக்கு சொந்தமானது ஆகும்.

    ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான ரோட்டை மாநகராட்சிக்கு இடம் பெறுவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சவேரியார் ஆலயத்தில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலைரூ. 20லட்சத்து 60ஆயிரம் செலவில் சீரமைக்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×