search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் -  அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
    X

    திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம். 

    திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் - அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

    • 54 -வதுவார்டில் தொடர்ந்து குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படுகிறது.
    • குறைகளில் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்.

    வீரபாண்டி:

    திருப்பூர் 4ம் மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் தலைமை தாங்கினார்.4-ம் மண்டல உதவி கமிஷனர் செல்வவிநாயகம் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில்:- 54 -வதுவார்டில் தொடர்ந்து குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் 50 துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 16 நபர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் குப்பை துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் புதிய கட்டடங்களுக்கு வரிவசூல் செய்யப்படுவதில்லை .விரைவாக வரி வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

    38-வது வார்டில் தெருவிளக்கு மாதம் இரண்டு முறை பழுதாகி விடுகிறது. அப்பகுதி யில் சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. 39 -வது வார்டு பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் பணிக்காக புலிகள் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தும் இதுவரை மூடப்படவில்லை. மேலும் குடிநீர் குழாய்களும் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

    57-வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் போடப்பட்டுள்ள வேலையானது சரிவர செய்யப்படவில்லை. இதனால் சாலை மேலும் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது என்றனர்.

    இதனைத் தொடர்ந்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

    4-ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் பேசுகையில்:- அனைத்து வார்டுகளிலும் தெரிவிக்கப்பட்ட குறைகளை விரைவாக நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த குறைகளில் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்என்றார்.

    Next Story
    ×