search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    X

    கூட்டத்தில் நகராட்சி சேர்மன் விஜயகண்ணன் பேசியதையும், வெளிநடப்பு செய்த

    அ.தி.மு.க. கவுன்சிலர்களையும் படத்தில் காணலாம். 

    குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

    ஆணையாளர் விஜய் குமார் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பல வாசகங்களுடன் கூடிய தட்டிகளுடன் கூட்ட அரங்கில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளே நுழைந்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் பழனிச்சாமி பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடை பழுதாகி உள்ளதால் கடை உரிமையாளர் கடையை காலி செய்ய சொல்கிறார்.

    வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் நகராட்சி தி.மு.க. உறுப்பினர் ஜேம்ஸ், ரேசன் கடைகளில் ரேகை வைக்கும் பிரச்சனை அனைத்து வார்டுகளில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் தொடர்ந்து துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், அம்பிகா, ரங்கநாதன், வேல்முருகன், பாலசுப்ரமணி, கதிரவன், கோவிந்தராஜ், பரிமளா, மகேஸ்வரி, கிருஷ்ணவேணி, புஷ்பா, தீபா, சுமதி, செல்வி, உள்ளிட்ட பலர் வடிகால் வசதி, வாட்டர் டேங்க் முன் உள்ளமுள்செடிகள் அகற்றுதல், சாலை வசதி, மின் விளக்கு வசதி, சாக்கடை அடைப்பை சரி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதனை தொடர்ந்து சேர்மன் விஜய்கண்ணன் உறுப்பினர்களின் கோரிக்ைக பரிசீலிக்கப்படும் என்றார்.

    முந்தைய கூட்டத்தில் உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×