search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வித்துறை"

    • கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பிரதிநிதிகள் ராமு, செந்தில்முருகன், பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப் பாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். திராவிட மாடல் என்பது காலாவதியாகி விட்டது என தமிழக கவர்னர் ரவி கூறி வருகிறார். ஆனால், சனா தானம் தான் காலாவதியாகி விட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதிநிலை பற்றாக்குறையாக இருந்தது. 

    • சூழல் காக்கும் பணியில் சிறப்பாக செயல்படும் 5 மாணவ, மாணவிகள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும்.
    • ஆசிரியர்களை தேர்வு செய்து சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண்டும்.

    மடத்துக்குளம் :

    நடப்பு கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் ஏற்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பசுமையான சூழலை மாணவர்கள் வாயிலாக ஏற்படுத்த சூழல் மன்றம் அமைக்க வேண்டும்.

    துவக்கப்பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு, நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்புகளில் சூழல் காக்கும் பணியில் சிறப்பாக செயல்படும் 5 மாணவ, மாணவிகள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும்.அதேபோல 6 முதல் 10ம் வகுப்பு, 9 முதல் பிளஸ் 2 வகுப்பில் தலா 15 பேர் கொண்ட குழு ஏற்படுத்த வேண்டும். இந்த மன்றத்திற்கு ஆசிரியர்களை தேர்வு செய்து சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண்டும்.

    மரக்கன்று நடுதல், மூலிகை தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட களப்பணி துவங்கி சூழல் விழிப்புணர்வு சார்ந்த போட்டிகளையும் நடத்த வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடுமலையில் உள்ள பள்ளிகளில் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடு தொய்வாக உள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, மாணவர்கள் மீதான அக்கறை உள்ளிட்டவைகளைப்பொறுத்தே சூழல் மன்றங்களின் செயல்பாடு சுறுசுறுப்பு அடையும்.இனிவரும் நாட்களில் சூழல் மன்றங்களின் செயல்பாடு, திறன்பட இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    • எமிஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்து பெற்றோருக்கு வழங்க வேண்டும்.
    • மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் பெற்றோர் தொலைபேசி எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்பப்படும்.

    சென்னை:

    1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை எமிஸ் என்று அழைக்கப்படும் கல்வி மேலாண்மைத்தகவல் அமைப்பு என்ற அடையாளச்சான்றிதழை பதிவு செய்து பராமரிப்பது அவசியம் என்று கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. அந்தவகையில் எமிஸ் அடையாளச்சான்றிதழை முறையாக பராமரிக்க புதிய வழிமுறைகளை கல்வித்துறை வகுத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * யு.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் மற்றொரு பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் ஏற்கனவே எமிஸ் அடையாளச்சான்றிதழ் உள்ளதா என்பதை சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர் உறுதிசெய்த பின்னரே புதிய எமிஸ் அடையாளச்சான்றிதழ் வழங்கவேண்டும்.

    * எமிஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்து பெற்றோருக்கு வழங்க வேண்டும். அதனை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.

    * மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் பெற்றோர் தொலைபேசி எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். அதன் மூலமே மாற்றங்கள் மேற்கொள்ள இயலும்.

    * 2-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் பள்ளி மாற்றம் செய்து சேரும்போது அவர்களுக்கு புதிய எமிஸ் அடையாளச்சான்றிதழ் உருவாக்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

    * மாணவர்களுடைய பள்ளியின் விவரம் மற்றும் எமிஸ் அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றை புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட வேண்டும்.
    • ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் தலைமை அலுவலகமான முதன்மை கல்வி அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக அரண்ம னை பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.

    3 ஆண்டுகளுக்கு முன்பு முதன்மை கல்வி அலுவல கத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல ஆவணங்கள் எரிந்து சாம்ப லானது. தற்போது அந்த அறை சீரமைக்கப்பட்டு மீண்டும் முதன்மைக்கல்வி அலுவலகம் அந்த கட்டி டத்திலேயே இயங்கி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவல கம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலைக்கல்வி) பழைய கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதேபோல் கல்வித்து றையின் துணை திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ. அலுவலகம், மாவட்ட உடற்கல்வி இயக்கு நர் அலுவலம், தனியார் மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவை ராமநாதபுரத்தில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. மேலும் ஜெ.ஆர்.சி., பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் போன்ற அலுவல கங்களும் ராமநாதபுரத்தில் இயங்கி வருகின்றன.

    எனவே ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் பெரும்பாலான செயல்பாடு களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தையே சார்ந்து உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங் களை ஒரே இடத்தில் அமைத்து செயல்பட செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை வருகிற 2-வது வாரத்தில் இருந்து மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • கணக்கெடுப்பின்போது, கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவ-மாணவிகளின் விவரங்களையும் சேகரிக்க கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    பள்ளிக்கு செல்லாத குழந்தைகள், இடைநிற்றல் மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. அந்த வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான பணிகளை இப்போதே தொடங்கி இருக்கிறது. அதன்படி, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை வருகிற 2-வது வாரத்தில் இருந்து மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஈடுபடுத்தவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் எந்தவொரு குடியிருப்பையும் விட்டுவிடாமல் வீடுவாரியாக சென்று கணக்கெடுக்கவும், பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச்சரியாக பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்த கணக்கெடுப்பின்போது, கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவ-மாணவிகளின் விவரங்களையும் சேகரிக்க கூறப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் முறையாக ஆவணப்படுத்தி வைப்பதோடு, பள்ளி செல்லாதவர்களை அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், மேலும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிகள் பாதிக்காதவாறு கள ஆய்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடக்க உள்ளது.
    • விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

    சென்னை:

    பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடக்க உள்ளது.

    விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிகளவில் வேறுபாடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின்போது கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மதிப்பீடு செய்யும்போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்படவேண்டும்.

    * உதவித்தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி, மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மைக்கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் சரிபார்க்கும்போது கவனக்குறைவினால் அதிகபட்ச மதிப்பெண்களைவிட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் புகார் பெறப்பட்டது. இதனால் தேர்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்வினை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவித்தேர்வாளர்கள் மீது தக்க நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.

    * மதிப்பீட்டுப் பணியின்போது தேவையில்லாமல் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் செல்போனை திருத்தும் அறையில் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மதிப்பீடு செய்ததில் அதிக வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப்பேற்கவேண்டும்.

    • கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
    • விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 20-ந் தேதி இந்த தேர்வு மையத்தில் பொருளியல் தேர்வு நடைபெற்றது. அப்போது இந்த தேர்வு மையத்தின் ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத மைய முதன்மை அலுவலர் ரவி அனுமதித்தாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக 8.30 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் உதவியாளர் மகாலிங்கம் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலர் ரவியிடம் புத்தகத்தை பார்த்து எழுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இது எல்லாருக்கும் பிரச்சினை ஆகி விடும் என்று கூறுகிறார்.

    அப்போது பேசிய தேர்வு மைய முதன்மை அதிகாரி ரவி அவர்களுக்கு பாடங்கள் தெரியாது. அதனால் எழுதி தேர்ச்சி பெறட்டும் என்று விட்டு விட்டேன் என்று கூறுகிறார்.

    இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் இதுபற்றி கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
    • ஆசிரியர் பயிற்றுனர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த சில பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    அதன்படி, முதல் கட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    • 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
    • 3 பொதுத்தேர்வுகளிலும் தமிழ் வழியில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரையிலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    இதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்தநிலையில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் விவரங்கள் நேற்று வெளியாகி உள்ளன.

    அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 மாணவ-மாணவிகளும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 பேர் எழுத இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த 3 பொதுத்தேர்வுகளிலும் தமிழ் வழியில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். அவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி
    • மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு கூறியிருந்தது. மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருப்பதால், விடுமுறை நாட்களில் எந்த காரணம் கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவாக தெரிவித்திருந்தார்.

    ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதி வழங்கியிருக்கிறார்.

    மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்படட முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இதுபோன்ற அறிவிப்பு மற்ற மாவட்டங்களிலும் வெளியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இனி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கான பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    • ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்காவிட்டால் மாணவர்கள் மோசமான நிலைக்கு போவார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 77 வகையாக நெறிமுறைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசரியர்கள் சங்க செய்தித் தொடர்பு செயலாளர் சேகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஆசிரியர்களுக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும். ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பெஞ்சை உடைப்பது, டேபிளை உடைப்பது என மாணவர்களின் பழக்கவழக்கம் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் இதைவிட மோசமான நிலைக்கு போவார்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், எல்லா ஆசிரியர்களும் பயமில்லாமல் வேலை செய்வார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயப்படுவார்கள், சரியாக படிப்பார்கள்.

    இன்றைய நிலைமை எப்படி இருக்கிறதென்றால், ஆசிரியர்கள்தான் மாணவர்களை பார்த்து பயப்படுகிறார்கள். எந்த மாணவன் என்ன செய்வானோ, எந்த மாணவன் அடிப்பானோ, எந்த மாணவன் எதாவது பிரச்சனை ஏற்படுத்துவானோ? என்ற பயத்துடனேயே ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆசிரியர்கள் இப்போது பெரும்பாலும் சொந்த வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
    • நீலகிரி மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    கோவை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு பள்ளி சூறையாடப்பட்டது.

    இதை கண்டித்து தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது, உத்தரவை மீறி விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவை மீறி தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அறிவித்து மூடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் மூடப்பட்டிருந்த தனியார் பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., மெட்ரிக், பிரைமரி என மொத்தம் 31 தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அறிவித்து இருந்தது தெரியவந்தது. இதேபோல நீலகிரி மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவித்து இருந்த 41 பள்ளிகளுக்கும் அரசு உத்தரவை மீறி பள்ளிகளை மூடியது ஏன் என்பது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில் மாவட்டம் முழுவதும் நேற்று 31 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்றார். இதேபோல நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவித்த 10 பள்ளிகளுக்கு நோட்டீசு அனுப்பப்படும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் பள்ளி சங்க நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் இயங்கும் நர்சரி மெடரிக் பள்ளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். சின்னசேலம் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    ×