search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் சூழல் மன்றங்கள் திறன்பட செயல்பட நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
    X

    கோப்புபடம்.

    பள்ளிகளில் சூழல் மன்றங்கள் திறன்பட செயல்பட நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

    • சூழல் காக்கும் பணியில் சிறப்பாக செயல்படும் 5 மாணவ, மாணவிகள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும்.
    • ஆசிரியர்களை தேர்வு செய்து சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண்டும்.

    மடத்துக்குளம் :

    நடப்பு கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் ஏற்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பசுமையான சூழலை மாணவர்கள் வாயிலாக ஏற்படுத்த சூழல் மன்றம் அமைக்க வேண்டும்.

    துவக்கப்பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு, நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்புகளில் சூழல் காக்கும் பணியில் சிறப்பாக செயல்படும் 5 மாணவ, மாணவிகள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும்.அதேபோல 6 முதல் 10ம் வகுப்பு, 9 முதல் பிளஸ் 2 வகுப்பில் தலா 15 பேர் கொண்ட குழு ஏற்படுத்த வேண்டும். இந்த மன்றத்திற்கு ஆசிரியர்களை தேர்வு செய்து சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண்டும்.

    மரக்கன்று நடுதல், மூலிகை தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட களப்பணி துவங்கி சூழல் விழிப்புணர்வு சார்ந்த போட்டிகளையும் நடத்த வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடுமலையில் உள்ள பள்ளிகளில் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடு தொய்வாக உள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, மாணவர்கள் மீதான அக்கறை உள்ளிட்டவைகளைப்பொறுத்தே சூழல் மன்றங்களின் செயல்பாடு சுறுசுறுப்பு அடையும்.இனிவரும் நாட்களில் சூழல் மன்றங்களின் செயல்பாடு, திறன்பட இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×