search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைத் திருவிழா"

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது.
    • பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.

    சேலம்:

    மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாண்டும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 பிரிவுகளில் 33 இனங்களிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 74 இனங்களிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 81 இனங்களிலும் என மொத்தம் 188 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.

    தற்போது வட்டார அளவில் முதல் 2 இடங்கள் பெற்ற 11,177 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

    அதன்படி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை புனித பால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்பள்ளி, காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் தொடக்கப் பள்ளி, பத்மாவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெறுகிறது.

    தொடக்க விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று மரவனேரி புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    • வெற்றி பெற்ற மாணவர்களில் முதல் 20 பேர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
    • மாணவர்கள் இந்த கலைத்திறமையை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு இடையே கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

    விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளுக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்ற 4 மாணவிகளுக்கு "கலையரசி" விருதுகளை வழங்கி வாழ்த்தினார். இதேபோல் 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளுக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்ற 4 மாணவர்களுக்கு "கலையரசன்" விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, மாணவ, மாணவிகளின் இந்த வெற்றிக்கு அவர்களின் துணிச்சலும், தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் காரணம் என்றும், இதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    'மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறை எத்தனையோ மகத்தான முன்னெடுப்புகளை செய்திருக்கிறது' என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    • தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகள் திரைப்படப் பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு நடனமாடினர்.

    தருமபுரி,

    தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கலை திருவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தேர்வ செய்யப்பட்டனர். இதில் மாவட்ட அளவில் தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மற்றும் அவ்வையார் மகளிர் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த கலைத் திருவிழாவில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, களிமண் வேலைப்பாடு, நடன போட்டி, பாட்டு பாடுதல், பம்பை, பறை அடித்தல், புலி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    மேலும் இந்த கலைத் திருவிழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் திரைப்படப் பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு நடனமாடினர். மேலும் பாரம்பரிய கலைகளான பம்பை, தப்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்களை ஆடி, தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கலைத் திருவிழாவில் மாவட்டம் முழுவதுமுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இதில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    விழாற்கு கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கவிதா அனைவரையும் வரவேற்றார்.

    இதில் சிறப்பு விருந்தி–னர்களாக பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே. பி. ரவி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கலைத் திருவிழாவில் கபிலர்மலை வட்டாரத்தைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட–னர். நிகழ்ச்சி–களுக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    ×