தருமபுரியில் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா

தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாணவ, மாணவிகள் திரைப்படப் பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு நடனமாடினர்.
தருமபுரியில் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா
Published on

தருமபுரி,

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கலை திருவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தேர்வ செய்யப்பட்டனர். இதில் மாவட்ட அளவில் தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மற்றும் அவ்வையார் மகளிர் பள்ளியில் நடைபெற்றது.

இந்த கலைத் திருவிழாவில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, களிமண் வேலைப்பாடு, நடன போட்டி, பாட்டு பாடுதல், பம்பை, பறை அடித்தல், புலி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும் இந்த கலைத் திருவிழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் திரைப்படப் பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு நடனமாடினர். மேலும் பாரம்பரிய கலைகளான பம்பை, தப்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்களை ஆடி, தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கலைத் திருவிழாவில் மாவட்டம் முழுவதுமுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com