வட்டார அளவிலான கலைத் திருவிழா

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வட்டார அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றபோது எடுத்த படம்.
வட்டார அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாற்கு கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கவிதா அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தி–னர்களாக பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே. பி. ரவி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

கலைத் திருவிழாவில் கபிலர்மலை வட்டாரத்தைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட–னர். நிகழ்ச்சி–களுக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com