search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் திடீர் ஆய்வு"

    • நல திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்றடைகிறதா என கேட்டறிந்தார்
    • அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு வந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆலங்காயம் வட்டார அரசு சமுதாயம் சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தமிழக அரசின் அனைத்து திட்டங்கள், செயல்பாடுகள், நிலைய வளாக தூய்மை, தேசிய குடற்புழு நீக்க திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆய்வு செய்து திட்டங்களின் பலன்கள் மக்களை நேரடியாக சென்றடைகிறதா என்று கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.

    ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ச. பசுபதி மருத்துவ பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 3 1/2 வயது மகள் சிவதர்ஷினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
    • அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி மாலை சிறுமி உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 3 1/2 வயது மகள் சிவதர்ஷினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததால் கரூரில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி மாலை சிறுமி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும், சோகத்தை யும் ஏற்படுத்தியது. மேலும் அப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து நாமக்கல் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கலெக்டர் ஆய்வு

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், நேற்று குழந்தை இறந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ குழுவிடம் விவரம் கேட்ட றிந்தார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது எனக் கூறி பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    அப்போது அங்கு வந்த விவசாயிகள், நன்செய் இடையாறு மற்றும் பாலப்பட்டி பகுதியில் சரியான நேரத்தில் கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை எனவும், இதனால் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க 15 வட்டாரங்களிலும் 318, பேரூராட்சி பகுதிகளில் 190, நகராட்சியில் 295 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை, மருந்து தெளிக்கப்பட்டு, புகை மருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், உதவி இயக்குனர்( ஊராட்சிகள்) கலை2யரசு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, பாலப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி, வட்டார மேற்பார்வையாளர் செல்வராஜ், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட வைகளை ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
    • அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட வைகளை ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு பயிலும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்தும், அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் குறித்தும், அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றனவா? என கேட்டறிந்தார்.

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சமையல் அறையுடன் கூடிய சமுதாய கூடம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். பள்ளபாளையத்தில் ரூ.20.57 லட்சம் மதிப்பீட்டில் மயானம் அமைக்கும் பணி, மாரியம்மன் கோவில் அருகில் ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் குறித்து விரிவாக கேட்டு அறிந்து, விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வி.புதுப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு வரும் பகுதிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், சங்கர், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன், ஊராட்சி செயலர் பொன்னுவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கு, ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி, சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம், ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கதிர்நரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    க.விலக்கு பகுதியில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதற்கு வைக்கப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அதற்கான பதிவேடுகள், மருந்து, மாத்திரைகளில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், மருந்து கிடங்கின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மருத்துவ உபகர ணங்கள், அதன் செயல்பாடு கள், உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம்,

    மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், அங்கு செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சித்த சிகிச்சை முறை குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    ராஜதானியில் செய ல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கதிர்ந ரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடையில் இம்மாதம் குடும்ப அட்டைதார ர்களுக்கு வழங்கிட வரப்பெற்ற முதல் தவணை அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    • மாணவர்களை ஆங்கில பாடத்தை படித்து காண்பிக்க கூறினார்
    • மதிய உணவை சாப்பிட்டு தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் டி.வீரப்பள்ளி பகுதிநேர நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்களின் விபரங்கள் மற்றும் தரம் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் பொதுமக்களிடம் உங்களுக்கான ரேசன் பொருட்கள் சரியான நேரத்தில் தங்குதடையின்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

    பொது மக்கள் கூடுதலாக கோதுமை வழங்கினா மேலும் இருப்பில் வைக்கப்ப ட்டுள்ள பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய குடிமை பொருட்களின் எடைகள் சரிபார்த்தார்.

    அதனை தொடர்ந்து நாட்டறம்பள்ளி வட்டம் எக்லாஸ்புரம் அரசு ஆரம்ப பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் படிக்கும் 3 மற்றும் 4 வகுப்பு மாணவர்களை கலெக்டர் ஆங்கில பாடத்தை படித்து காண்பிக்க கூறினார்.

    மேலும் எக்லாஸ்புரம் அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவு சாப்பிட்டு சமையல் எப்படி உள்ளது என்பது குறித்து ருசித்து பார்த்து மாணவர்களுடைய கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், நியாய விலைக்கடை விற்பனை யாளர்கள், பள்ளிஆசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பொருட்களின் இருப்பு குறித்து கடைகளில் இருந்த விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தார்.
    • பொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ெரயில்வே ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் அருவங்காடு கோபாலபுரம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ெரயில்வே ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடையில் ஆய்வு செய்தபிறகு பொருட்களின் இருப்பு விவரம், விலைப்பட்டியல், கடை செயல்படும் நேரம், வார விடுமுறை நாள், கண்காணிப்பு குழு உறுப்பினர் விவரம், தீயணைப்பு உபகரணம், முதலுதவி பெட்டி, அத்தியாவசிய பொருட்களின் மாதிரிகள் போன்ற விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும்.

    புகார் பதிவேடு, கண்காணிப்பு குழு பதிவேடு, அங்கீகார சான்று, உணவு பாதுகாப்பு சான்று, எடை எந்திர சான்று போன்றவற்றை விற்பனையாளர்கள் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    இதையடுத்து அருவங்காடு கோபாலபுரம் முன்னாள் ராணுவத்தினர் கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, மண் எண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை, கடையின் செயல்பாடு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களிடம் கடையின் செயல்பாடுகள், வழங்கப்பட்டு வரும் அரிசி மற்றும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்து, அவர்களு்ககு பொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, குன்னூர் தாசில்தார் சிவக்குமார், குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தற்காலிக சோதனைச்சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ ர்களின் எண்ணிக்கை, வருகைபதிவேடு, குடிநீர், கழிப்பிடம் உள்பட அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார்.

    தேனி:

    தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தற்காலிக சோதனைச்சாவடியில் பணியாளர்களின் எண்ணி க்கை, வருகைபதிவேடு, வாகனங்களுக்கான பதிவேடு, கணினி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவற்றை கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் வாகனசோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. சபரிமலை அய்யப்பன்கோவிலுக்கு கடந்த சில வாரங்களாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் வாகனங்களும் அதிகரித்துள்ளது. இதனால் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட தேனி-குமுளி சாலையில் தற்காலிக வாகனசோதனைச்சாவடி கடந்த 1-ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

    தற்காலிக அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வாகனங்கள் சென்றுவருகின்றன. எனவே இப்பகுதியில் சாலைப்பணிகள் மேற்கொள்ளும்போது பக்தர்களின் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து உத்தமபாளையம் அருகில் உள்ள கே.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலச்சிந்தலைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிய ஆகிய பள்ளிகளில் எண்ணும்,எழுத்தும் திட்டத்தின் கீழ் 1 முதல் 3-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை , அவர்களுக்கு கல்வி போதிக்கும் முறை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ ர்களின் எண்ணிக்கை, வருகைபதிவேடு, குடிநீர், கழிப்பிடம் உள்பட அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். சத்துணவு மையத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் இருப்பு விபரங்களையும் கேட்டறிந்து சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு உணவு சமைக்க அறிவுறுத்தினார்.

    • தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் பல்வேறு பணிகள் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தேனி நகர்சாலை ரெயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.

    தேனி :

    தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குடிமைப் பொருட்களின் அளவு, புகார் அளிக்கப்பட வேண்டிய அலுவலர்களின் கைபேசி எண்கள் குறித்து முறையாக தகவல் பலகையில் பதியப்படுள்ளதா, விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதா என கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் தேனி நகர்ப்பகுதியில் தேனி நெடுஞ்சாலை கட்டுமானம்மற்றும்பராமரிப்பு கோட்டத்தின் மூல ம் கொச்சின்- தொண்டி தேசிய நெடுஞ்சாலையி ல்கொட்டகுடி ஆற்றுப்பாலம்முதல்மதுரை நோக்கி செல்லும்சாலையில்நேரு சிலை சந்திப்பில்ஏற்படும்போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஓர் பிரிவகை மேம்பாலம்மற்றும் நேருசிலை சந்திப்பு முதல்பெரியகுளம்செல்லும்சாலையில்இரயில்வே சந்திப்பில்ஏற்படும்போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேனி நகர்சாலை ெரயில்வே மேம்பாலமும்அமையவுள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.

    • அச்சு வார்ப்பு தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது.
    • ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் துவக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    சூலூர்,

    சூலூர் அருகே மோப்பிரிப்பாளையத்தில் கொடிசியா தொழில்பேட்டை வளாகம் அமைந்துள்ளது.

    இங்கு தற்போது 25-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடிசியா தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமைந்துள்ள தொழிற்சாலைகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும், புதிதாக துவங்கப்பட உள்ள ஆலைகளின் இடங்களையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து அவர் கள்ளப்பாளையத்தில் 116 ஏக்கர் பரப்பளவில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள கொடிசியா தொழில் பூங்கா, சொலவம்பாலையத்தில் 42.4 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.06 கோடி மதிப்பீட்டில் கொசிமா தொழில் பூங்கா, வெள்ளலூரில் ரூ.4.47 கோடி மதிப்பீட்டில் வார்ப்பு குழுமம், மதுக்கரையில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் பொறியியல் குழுமத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கிட்டாம்பாளையத்தில் 316.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.24.16 கோடி மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா தொழி்ல் கூட்டுறவு தொழிற்பேட்டை, சின்னவேடம்பட்டியில் ரூ.5.73 கோடியில் அலுமினியம் அச்சு வார்ப்பு தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது.

    மோப்பிரிபாளையத்தில் சிஎன்சி எந்திரங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகள், தொழில் பூங்காவின் வரைபடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    இதனைத் தொடர்ந்து மோப்பிரிபாளையத்தில் பெரியார் நினைவு சமத்துபுரம் மற்றும் அரசூரில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூபாய் 5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் ஆகியவற்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மோப்பிரி பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், வார்டு உறுப்பினர்கள், அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ், அரசூர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ், அரசூர் ஊராட்சி செயலாளர் கணேச மூர்த்தி மற்றும் பலர் இருந்தனர்.

    • உள்நோயாளிகள், குளிரூட்டப்பட்ட மருந்துகள் தேவை இருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தார்,
    • மகப்பேறு தாய்மார்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூலுவப்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.‌

    நோயாளிகள் வருகை, மருந்துகள் இருப்பு மற்றும் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள், குளிரூட்டப்பட்ட மருந்துகள் தேவை இருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தார், வேறு ஏதும் மருந்துகள் தேவைப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

    மகப்பேறு தாய்மார்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மகப்பேறு தாய்மாருக்கு அரசு சார்பில் மகப்பேறு பெட்டகம் வழங்கினார். ஆய்வின் போது சுகாதார துறை அருணா, பிளாக் சூப்பர்வைசர் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 

    • தூய்மையாக வைத்துகொள்ள உத்தரவு
    • சமையலருக்கு அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவர்கள் விடுதியில் உள்ள சமையலறை மாணவர்கள் தங்கும் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

    மாணவர்களுக்கு சுத்தமாக சுகாதாரமாகவும் உணவுகளை தயார் செய்து வழங்க வேண்டும் என சமையலருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் இவ்விடுதி உள்ள இடங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என நாட்டறம்பள்ளி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ஹரிதாஸ், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் த.பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம், ரேசன் கடையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டி மற்றும் தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ரேசன் கடைகளில் இம்மாதத்திற்கான பொருட்கள் முதல் தவணை வரப்பெற்ற விபரம் மற்றும் விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தகவல் பலகையில் பொருட்களின் இருப்புகளை முறையாக தினந்தோறும் பதிவு செய்திடவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் குடிமைப் பொருட்களை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் வழங்கிட விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, அருகில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு கலெக்டர் நேரடியாக சென்று இம்மாதம் வழங்கப்பட்ட அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம், ரேசன் கடையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    ×