search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி பகுதியில் மருந்துக்கிடங்கு, ஆஸ்பத்திரிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    ஆண்டிபட்டியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    ஆண்டிபட்டி பகுதியில் மருந்துக்கிடங்கு, ஆஸ்பத்திரிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கு, ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி, சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம், ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கதிர்நரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    க.விலக்கு பகுதியில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதற்கு வைக்கப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அதற்கான பதிவேடுகள், மருந்து, மாத்திரைகளில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், மருந்து கிடங்கின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மருத்துவ உபகர ணங்கள், அதன் செயல்பாடு கள், உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம்,

    மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், அங்கு செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சித்த சிகிச்சை முறை குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    ராஜதானியில் செய ல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கதிர்ந ரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடையில் இம்மாதம் குடும்ப அட்டைதார ர்களுக்கு வழங்கிட வரப்பெற்ற முதல் தவணை அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    Next Story
    ×