search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து"

    • கன்னியாகுமரியில் கோவா கவர்னர் பேச்சு
    • விழா முடிவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த 52-வது ஆண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் 1893 -ம் ஆண்டில் சிக்காகோநகரில் நடைபெற்ற சர்வ தர்ம சபையில் அனைவரையும் ஒன்று சேர்த்து உலக சகோதரத்துவத்தை உரு வாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்த ஆன்மாவை தட்டி எழுப்பும் சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தா சபாக்கிரகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவுக்கு கன்னியா குமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் வந்தே மாதரம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடினார்கள். பள்ளி துணை முதல்வர் சஞ்சீவி ராஜன் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் சரிகா ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். பின்னர் கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய திருநாடு 3 முக்கியமான நாகரீகங்களை கொண்ட நாடாகும். இந்த உலகத்தில் மனித தன்மையுள்ள மக்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றால் அது நமது பாரத திருநாட்டில் தான் வாழுகிறார்கள். சுவாமி விவேகானந்தருடைய கருத்துக்களை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் உடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தெரியவரும். சுவாமி விவேகானந்தரின் கொ ள்கைகளை மாணவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற அடி ப்படையில் ஒற்றுமையாக வாழ்கி றார்கள். இந்த உலக த்தில் வேறு எந்த நாட்டிலும் இந்த ஒற்றுமையை பார்க்க முடியாது. இந்த உலகத்தின் மிகச்சிறந்த வளமான நாடு இந்தியா. அதனால்தான் அந்த காலத்தில் செல்வ வளம் மிகுந்த நமது நாட்டை கொள்ளையடிக்க ஆங்கிலேயர்கள் வந்தார்கள். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவாலயத்தை உலகில் உள்ள அனைவரும் பார்த்து அதன் மகிமையை உணர வேண்டும். உக்ரைன் போரில் நடந்த நிகழ்வின் மூலம் இந்திய தேசியக் கொடியின் பெருமையை நாம் தெளிவாக உணர வேண்டும். நம்முடைய தேவையை நாமே நிறைவேற்ற வேண்டும். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு கோவா கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பேசினார். பின்னர் கோவா கவர்னர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை விவேகானந்த கேந்திராவுக்கு ரூ.1 லட்சத்துக்குரிய காசோலையை விவேகா னந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ண னிடம் வழங்கினார். முடிவில் பள்ளி முதல்வர் சரிகா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை ஜெயா தொகுத்து வழங்கினார்

    விழா முடிவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • புத்தகம் வாசிக்க வாசிக்க வாழ்க்கை வசப்படும். தலைகுனிந்து புத்தகம் படித்தால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
    • ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள், வீதி தோறும் நூலகங்கள் அமைய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மன்னார்குடியில் நடத்தும் புத்தக திருவிழாவில் 9- நாள் அரங்க நிகழ்ச்சிக்கு சன்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சண்முகராஜன் தலைமை தாங்கினார்.முன்னதாக கே.ஆர்.மதிவாணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புத்தகங்கள் தான் ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். நிறைவான வாழ்க்கை வாழ வழி கோலும்.

    ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள், வீதி தோறும் நூலகங்கள் அமைய வேண்டும்.

    திருக்குறள் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட தன்னுடைய அனைத்து குறள்களையும் மிகவும் மென்மையாக தான் எடுத்துரைத்துள்ளார்.

    எங்குமே கடிந்து சொன்னதில்லை ஆனால் அவரே கூட ஒரு குறளில் மிக கடுமையாக கட்டளையாக வலிமையாக கூறுகிறார்.

    கற்க கசடற பின் நிற்க அதற்கு தக என கடுமை காட்டி மனிதர்களை நல்வழி படுத்துபவை புத்தகங்களை என்பதால் இக்குறளை இவ்வாறு எழுதியிருக்கிறார்.

    நூல்கள் கற்க கற்க அறிவு வளரும் ஞானம் பெருகும்.

    முதன்முதலாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடி சுதேசி இயக்க முன்னோடியாக கப்பல் விட்டு

    போராட்டம் செய்து செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகம் அளப்பரியதல்லவா அதை நாம் உணர வேண்டும்.

    புத்தகம் வாசிக்க வாசிக்க வாழ்க்கை வசப்படும்.

    தலைகுனிந்து புத்தகம் படித்தால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

    தொட்டுப்பார்த்தால் காகிதம்.

    தொடர்ந்து படித்தால் அதுவே ஆயுதம் என்கிற வகையில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும்.

    இதுபோன்ற மன்னார்குடி போன்ற ஊர்களில் புத்தக கண்காட்சி நடத்துவது மிகவும் பாராட்டுக்கு ரியதாகும் என கூறினார்.

    முடிவில் எஸ்.டி.முருகேசன் நள்றி கூறினார்.

    • புகாரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில்:

    அகஸ்தீஸ்வரம் அருகே எழுசாட்டு பத்து பகுதியைச் சேர்ந்தவர் ஜெமீன் (வயது 33).

    இவர், குதிரை வளர்த்து வருகிறார். அதனை கொண்டு கன்னியாகுமரியில் கடற்கரைக்கு வரும் பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்வார்.

    கடந்த சில நாட்களாக இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டார்.

    சமூக வலைதளங்களில் இதனை பார்த்த தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, தென்தாமரைகுளம் போலீ சில் இதுபற்றி புகார் செய்தார்.

    அதில், முதல்-அமைச்சர் பெயருக்கு களங்கத்தையும், நன்மதிப்பை குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜெமீன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு ஜெமீன் கைது செய்யப்பட்டார்.

    அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • 15-ந் தேதிக்குள் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கவேண்டும்.
    • பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    திருப்பூர் :

    ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனங்களின் எந்திர முதலீடுகளுக்கு மானியம் வழங்கும் புதிய உற்பத்தி சார் ஊக்க தொகை திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. வரைவு நிலையில் உள்ள இந்த திட்டம் குறித்து வரும் 15-ந் தேதிக்குள் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கவேண்டும்.

    மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஏ-டப்' என்ற திருத்தி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்துக்கு மாற்றாக, பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. புதிய திட்டத்துக்கான வரைவு அறிக்கை, கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது.வரைவு அறிக்கை குறித்து அனைத்து ஜவுளித்துறையினரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஜவுளி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஆடிட்டர் அரசப்பன் கூறியதாவது:- பி.எல்.ஐ., என்கிற புதிய திட்டத்தில் ஜவுளி உற்பத்தி எந்திரங்களின் முதலீடுகளுக்கு அதன்மூலம் அடையும் விற்பனை இலக்கு அடிப்படையில் மானியம் வழங்கப்படும். மானிய ஊக்கத்தொகை 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். எந்திரம் கொள்முதல் செய்த முதல் ஆண்டில், எந்திரத்தின் முதலீட்டு மதிப்பில் இருமடங்கு வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும்.அடுத்தடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10 சதவீதம் வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும்.வரைவு அறிக்கையின்படி கணக்கிட்டால் 5 ஆண்டுகளில், எந்திரத்திற்கான முதலீட்டில் நிறுவனங்கள் 60 சதவீத தொகையை மானியமாக பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 1 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரையிலான எந்திரம் முதலீடுகளுக்கும், பெரிய நிறுவனங்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.நூற்பாலை, நெசவு, பின்னலாடை உற்பத்தி, நிட்டிங், பிராசசிங் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் என அனைத்து துறையினரும் இந்த திட்டத்தில் எந்திர முதலீடுகளுக்கு ஊக்கத்தொகை பெறமுடியும்.

    ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கான எந்திர முதலீடுகளுக்கும் புதிய திட்டத்தில் மானிய ஊக்கத்தொகை கிடைக்கும். ஜாப்ஒர்க் ரசீதுகள் விற்பனையாக எடுத்துக்கொள்ளப்படும்.தற்போதுவரை புதிய திட்டம் வரைவு நிலையில் மட்டுமே உள்ளது. ஜவுளித்துறையினர் தங்கள் கருத்துகளை வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதிக்குள் புதிய திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது.
    • ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது. இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேலம் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் கோபா லகிருஷ்ணன் மற்றும் சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பிரசாத், சங்ககிரி ஆர்டிஓ சௌமியா, தாசில்தார் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கருமாபுரத்தானூர் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் மற்றும் வீராச்சி பாளையம் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க திட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதில், ஆலையின் துணைத் தலைவர் (தயாரிப்பு) வீரபாகு, மூத்தபொதுமேலாளர் (சுரங்கம் மற்றும் சுற்றுச்சூ ழல்) பழனிகுமரேசன், ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகா வல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாரமங்கலம் நகராட்சியில் சுடுகாட்டில் உள்ள நினைவு சின்னங்களை அகற்றுவதை குறித்து கருத்து கேட்பு கூட்டம் அரங்கில் நடைபெற்றது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ள நிலையில் கடந்த மாதம் அதற்கான மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களிடம் ஒரு மனதாக ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    அதன்படி 1.5 கோடியில் எரிவாயு தகனமடை அமைக்க கலை கன்ஸ்ட்ரக்சன் என்ற ஒப்பந்ததாரருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மயான பகுதியானது திடக்கழிவு மேலாண்மை, அரசு ஆரம்ப பள்ளி , மற்றும் குப்பை கிடங்குகளால் நிரம்பியுள்ளது .

    இதனால் ஏற்கனவே உள்ள இறந்தவர்களின் நினைவு மேடைகளை அகற்றிவிட்டு புது பொலிவுடன் கூடிய மயான பகுதியை அமைக்க வேண்டி வருவாய் துறை. காவல்துறை. நகராட்சி துறை அதிகாரிகளின் முன்னிலையில் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு தரப்பினர் முன்னோர்களின் நினைவு சின்னங்களை காலம் காலமாக வழிபட்டு வருவதால் அதனை அகற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் எரிவாயு தகனமடை அதே பகுதியில் வேறு இடத்தில் அமைத்து கொள்ளுமாறு கருத்து கூறினர் .

    அதனை தொடர்ந்து மற்றோரு தரப்பினர் நகராட்சியாக தரம் உயரும்போது இதுபோன்ற வளர்ச்சி திட்டப்பணிகளை நாம் கொண்டு வருவது அவசியமான ஒன்றுதான் அதனால் ஏற்கனவே உள்ள நினைவு மேடைகளை அகற்றிவிட்டு அந்தப்பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்கலாம் என்று ஆதரவு தெரிவித்தனர் .இதனால் இரு தரப்பினரும் அதிகாரிகளின் முன்னிலையில் ஒருவருக்கொருவர் கடுமையாக வார்த்தைகளால் மோதிக்கொண்டனர் .

    அப்போது இருதரப்பினரையும் அதிகாரிகள் சமரச படுத்தினர் .கூட்ட முடிவில் இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது நினைவு சின்னங்களை அகற்ற ஒருதரப்பு ஆதரவும் , மற்றோரு தரப்பு எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையில் ஏற்கனவே மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது .

    எனவே நினைவு சின்னங்களை அகற்றிவிட்டு எரிவாயு தகன மேடை அமைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமானால் மாற்று இடம் தேர்வு செய்து எரிவாயு தகனமேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×