search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் நகராட்சியில் சுடுகாட்டில் உள்ள நினைவு சின்னங்களை அகற்ற பொதுமக்கள் கருத்து
    X

    கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

    தாரமங்கலம் நகராட்சியில் சுடுகாட்டில் உள்ள நினைவு சின்னங்களை அகற்ற பொதுமக்கள் கருத்து

    தாரமங்கலம் நகராட்சியில் சுடுகாட்டில் உள்ள நினைவு சின்னங்களை அகற்றுவதை குறித்து கருத்து கேட்பு கூட்டம் அரங்கில் நடைபெற்றது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ள நிலையில் கடந்த மாதம் அதற்கான மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களிடம் ஒரு மனதாக ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    அதன்படி 1.5 கோடியில் எரிவாயு தகனமடை அமைக்க கலை கன்ஸ்ட்ரக்சன் என்ற ஒப்பந்ததாரருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மயான பகுதியானது திடக்கழிவு மேலாண்மை, அரசு ஆரம்ப பள்ளி , மற்றும் குப்பை கிடங்குகளால் நிரம்பியுள்ளது .

    இதனால் ஏற்கனவே உள்ள இறந்தவர்களின் நினைவு மேடைகளை அகற்றிவிட்டு புது பொலிவுடன் கூடிய மயான பகுதியை அமைக்க வேண்டி வருவாய் துறை. காவல்துறை. நகராட்சி துறை அதிகாரிகளின் முன்னிலையில் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு தரப்பினர் முன்னோர்களின் நினைவு சின்னங்களை காலம் காலமாக வழிபட்டு வருவதால் அதனை அகற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் எரிவாயு தகனமடை அதே பகுதியில் வேறு இடத்தில் அமைத்து கொள்ளுமாறு கருத்து கூறினர் .

    அதனை தொடர்ந்து மற்றோரு தரப்பினர் நகராட்சியாக தரம் உயரும்போது இதுபோன்ற வளர்ச்சி திட்டப்பணிகளை நாம் கொண்டு வருவது அவசியமான ஒன்றுதான் அதனால் ஏற்கனவே உள்ள நினைவு மேடைகளை அகற்றிவிட்டு அந்தப்பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்கலாம் என்று ஆதரவு தெரிவித்தனர் .இதனால் இரு தரப்பினரும் அதிகாரிகளின் முன்னிலையில் ஒருவருக்கொருவர் கடுமையாக வார்த்தைகளால் மோதிக்கொண்டனர் .

    அப்போது இருதரப்பினரையும் அதிகாரிகள் சமரச படுத்தினர் .கூட்ட முடிவில் இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது நினைவு சின்னங்களை அகற்ற ஒருதரப்பு ஆதரவும் , மற்றோரு தரப்பு எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையில் ஏற்கனவே மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது .

    எனவே நினைவு சின்னங்களை அகற்றிவிட்டு எரிவாயு தகன மேடை அமைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமானால் மாற்று இடம் தேர்வு செய்து எரிவாயு தகனமேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×