search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண் சிகிச்சை முகாம்"

    • பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    புதியம்புத்தூர்:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேஷன் மற்றும் பசுவந்தனை தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி கிளை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு சங்க நிதி உதவியுடன் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.

    முகாமை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் பாண்டி குமார் தொடங்கி வைத்தார். மருத்துவர் லோகேஷ் குமார், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவி லட்சுமி சிதம்பரம், பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர் சீதா ராம் ஆகியோர் கலந்து கொண்ட னர். கண் சிகிச்சை முகாமில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு போக்குவரத்து காவல் நிலையம் அருகில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதனை பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம், திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் ஆகியன இணைந்து நடத்தியது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட காவல்துறை, அவிநாசி காவல் உட்கோட்டம், பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.

    • பொதுமக்களுக்கு பலர் பயன் பெற்றனர்
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிமேகலைஜெயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக ஆற்காடு எம். எல் .ஏ. ஈஸ்வரப்பன், கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.

    • கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
    • அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பல்லடம் : 

    பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கணபதிபாளையத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    ஊராட்சி துணைத்தலைவர் முத்துகுமார் முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

    அதில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடி வழங்கினர்
    • டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன நாளையொட்டி வேலூர் லாங்கு பஜாரில் உள்ள சண்முகனடியார் மண்டபத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் இணைந்து சிஎம்சி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    பெங்களூர் மண்டல மேலாளர் எஸ்.பரணிதரன் மேற்பார்வையில் நடந்த முகாமிற்கு வேலூர் கிளை மேலாளர் புன்னைவாணன் தலைமை தாங்கினார். பெங்களூர் மண்டல துணை மேலாளர் ராம்நாத் விமல் முன்னிலை வகித்தார். சி.எம்.சி கண் மருத்துவமனை டாக்டர் ஹிட்லர் தலைமையில் மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்தனர். இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடி வழங்க உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் வேலூர் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை எம்.டி.சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த அறக்கட்டளையின் சார்பில் விசாலாட்சி புரத்தில் உள்ள சித்து மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    முகாமில் கணினி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பார்வை குறைபாடு, கண் நரம்பு சிகிச்சை. கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, அடிக்கடி தலைவலி, கண் நரம்பு ஆகியவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி யின் தாளாளர் சுகன்யா ஜெகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கவுரி சாலமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்.டி. சமுதாய அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர். இ.ஜெரினா நன்றி தெரிவித்தார்.

    • 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
    • குறைபாடுகள் கண்டறியப்பட்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருப்பூர்  :

    திருப்பூர் 54-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சி .அருணாச்சலம் தலைமையில், மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் திருப்பூர் ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். 54 -வது வார்டு கவுன்சிலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4ம் மண்டல பொறுப்பாளர் அருணாச்சலம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பாரதி, ஜெயக்குமார், ஜீவானந்தம், ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.

    சிகிச்சை முகாமில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 100க்கு ம் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பரிசோதனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ×