

மதுரை
மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த அறக்கட்டளையின் சார்பில் விசாலாட்சி புரத்தில் உள்ள சித்து மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முகாமில் கணினி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பார்வை குறைபாடு, கண் நரம்பு சிகிச்சை. கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, அடிக்கடி தலைவலி, கண் நரம்பு ஆகியவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி யின் தாளாளர் சுகன்யா ஜெகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கவுரி சாலமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்.டி. சமுதாய அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர். இ.ஜெரினா நன்றி தெரிவித்தார்.