பசுவந்தனையில் இலவச கண் சிகிச்சை முகாம்

பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.முகாமில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் ஒருவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
முகாமில் ஒருவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
Published on

புதியம்புத்தூர்:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேஷன் மற்றும் பசுவந்தனை தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி கிளை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு சங்க நிதி உதவியுடன் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.

முகாமை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் பாண்டி குமார் தொடங்கி வைத்தார். மருத்துவர் லோகேஷ் குமார், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவி லட்சுமி சிதம்பரம், பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர் சீதா ராம் ஆகியோர் கலந்து கொண்ட னர். கண் சிகிச்சை முகாமில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com