என் மலர்
நீங்கள் தேடியது "eye treatment"
- செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு 44 பேர் தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்று பேசினார்.
செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் அஸ்வின் தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 86 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 44 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவதுறையினர் செய்திருந்தனர்.
- மதுரை எம்.டி.சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த அறக்கட்டளையின் சார்பில் விசாலாட்சி புரத்தில் உள்ள சித்து மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முகாமில் கணினி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பார்வை குறைபாடு, கண் நரம்பு சிகிச்சை. கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, அடிக்கடி தலைவலி, கண் நரம்பு ஆகியவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி யின் தாளாளர் சுகன்யா ஜெகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கவுரி சாலமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்.டி. சமுதாய அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர். இ.ஜெரினா நன்றி தெரிவித்தார்.
- சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
- 82 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகர், சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் பிரியங்கா தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்தனர். இதில் 121 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 82 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவத் துறையினர் செய்திருந்தனர்.
- முகாமில் 114 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
- 74 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார். மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகர், சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் செலின் மேரி குரியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 114 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 74 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவத் துறையினர் செய்திருந்தனர்.






