சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம்

செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு 44 பேர் தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கண் சிகிச்சை முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
கண் சிகிச்சை முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார்.

கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்று பேசினார்.

செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் அஸ்வின் தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 86 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 44 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவதுறையினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com