search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல்"

    • திருச்சி விமான நிலையத்தில் ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 646 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
    • இரண்டு பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது ஒரு பயணி கொண்டு வந்த டிராவல் பேக் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தது.இதனை தொடர்ந்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் கம்பி வடிவில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது தெரிய வந்தது.இதேபோன்று மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பெண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் தனது உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.இந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 646 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு தினந்தோறும் வாகன சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட் கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைபேசி எண் 1800 599 5950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தஞ்சை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்.

    பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் நிலையங்கள், ரேஷன்கடைகள், ரெயில் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகம், டோல் கேட் மற்றும் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்து வரு கின்றனர்.

    மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பெரம்பலூரில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
    • குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் ரேசன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இலவச தொலைபேசி எண் 1800 599 5950 எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான பஸ்ஸ்டாப், ரேசன்கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் முக்கிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையில்படும் படி இலவச எண் கொண்ட போஸ்டர், பேனர் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அகரம்சீகூர் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்
    • டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மங்களமேடு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி 4 -யூனிட் கிராவல் மண் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரியை மங்களமேடு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும் டிப்பர் லாரி ஓட்டுனரான பிரம்மதேசம் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன்(49)என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக டிப்பர்லாரிகளை வழிமறித்து போலிஸார் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.14 கோடி மதிப்புள்ள என கடத்தல் தங்கம் பறிமுதல்
    • சுங்கத்துறை அதிகாரிகள், பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திரா அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீ சார் அறிவழகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைகடலி மெயின் ரோட்டில் உள்ள ஒருவரின் கடைக்கு கடத்தியது தெரியவந்தது .

    இதனிடையே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, மணிமாறன் மற்றும் ஜெயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து கடத்தி வந்த தடை செய்யப்பட்ட 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து பெரம்பூர் காவல் துறையினரிடம் குற்றவா ளிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கத்துடன் சுங்கத்துறை டிரைவர் பிடிபட்டார்
    • கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக திடுக் தகவல் வெளியாகி உள்ளது

    திருச்சி,

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் ,ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்கூட்டர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கி சேர்ந்த நடராஜன் (வயது43)பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வருகிறது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை மையத்தை சுங்கத்துறையின் ஓட்டுநர் தாண்டிச் சென்று பயணியிடமிருந்து தங்கத்தை பெற்று வெளியே கொண்டு செல்ல முயன்ற போது பிடிபட்டுள்ளார். இந்த தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்ததாக தெரிய வருகிறது. மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும், இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உடனடியாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடத்தலில் பங்கு பெற்ற மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுங்கத்துறை ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. நேற்று இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே உள்ள மட்டிகை கிராமத்தில் செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்ட மர்நபர்கள் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., லாரி போன்றவைகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • திருமணஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபர்
    • பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று காலை மாணவி வழக்கம் போல தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி பள்ளிக்கு செல்லும் போது சுரேஷ் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர் மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு புறப் பட்டு சென்று கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது மோட்டார் சைக்கிளில் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வாலிபர் மாணவியுடன் எங்கு உள்ளார் என தேடி வருகின்றனர்.

    • தொட்டியம் அருகே விபத்தில் சிக்கிய காருக்குள் 15 மூட்டை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    • காரை ஒட்டி வந்த டிரைவர் தப்பியோட்டம்

    தொட்டியம்,

    தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம்புதூர் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ராமஜெயம் (18) என்பவர் தொட்டியம் வந்துவிட்டு காமலாபுரம் புதூருக்கு செல்வதற்காக திருச்சி சேலம் சாலையில் தொட்டியம் தாசில்தார் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருச்சி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ராமஜெயம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்தவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தொட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி உள்ளனர். தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பறிமுதல் செய்த போது காரின் உள்ளே தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 15- க்கும் மேற்பட்ட மூட்டைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசாரிடம் புகார்
    • 17 வயது கல்லூரி மாணவியை வாலிபரிடம் இருந்து மீட்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). இவர் விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர், 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் தாய் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசையும், மாணவியையும் மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் விக்னேசை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    • முசிறியில் வட்டி பணம் கேட்டு டிரைவரை கடத்தி இரண்டு தினங்களாக சித்திரவதை செய்யப்பட்டு உள்ளது
    • போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அறிந்ததும் சகோதரர்கள் தலை மறைவு

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவில் வசிக்கும் ராஜசேகர் மகன் கண்ணன்(வயது 36). ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளத்தெருவில் வசிக்கும் நாராயணன் மகன்கள் ராஜபாண்டி (44), ஸ்ரீராம் (35) ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.30 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். அதற்கான வட்டி தொகை என தொடர்ந்து கட்டி வந்த நபர் தற்போது மூன்று மாதமாக வட்டி பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன் மீது உள்ள ஒரு வழக்கு சம்பந்தமாக முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியில் வரும் பொழுது ஸ்ரீராம் என்பவர் கண்ணனை அழைத்து சென்று தனது வீட்டில் அடைத்து வைத்து, ராஜபாண்டியுடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளனர். மேலும் ராஜபாண்டி அவரது நண்பர்களை ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் அட்மிஷன் காக செல்லும்போது கண்ணனையும் காரில் அழைத்துச் சென்று துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். கண்ணன் மனைவி தங்கவல்லி மற்றும் இவர்களது குழந்தை லிகிஸ்(8), தர்ஷன்(7) ஆகிய மூவரையும் ஸ்ரீராம் வீட்டிற்குள் அடைத்து பூட்டி சென்றுள்ளார். குழந்தைகள் கூச்சல் இட்டு கத்திய பொழுது அருகில் குடியிருந்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வெளியே அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து தங்கவள்ளி முசிறி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். தங்கள் மீது புகார் செய்யப்பட்டதை அறிந்து கண்ணனை, ராஜபாண்டியும், ஸ்ரீராமும் விடுவித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட கண்ணன், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித் து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக், ஆள்கடத்தல், அடித்து துன்புறுத்துதல் போன்ற பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ராஜபாண்டி, ஸ்ரீராம் ஆகிய இருவரையும்தேடி வருகிறார். 

    ×