திருநாவலூர் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி, ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்

செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
திருநாவலூர் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி, ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்
Published on

கள்ளக்குறிச்சி:

திருநாவலூர் அருகே உள்ள மட்டிகை கிராமத்தில் செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்ட மர்நபர்கள் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., லாரி போன்றவைகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com