search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி."

    • இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசிய, தி.மு.க.வைச் சோ்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து குழப்பம் விளைவித்தாா்.

    நாமக்கல்:

    இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசிய, தி.மு.க.வைச் சோ்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பா.ஜ.க .மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி மனு அளித்தாா். பின்னர் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    சென்னை, பெரியாா் திடலில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்மாதிரியுமான ஆ.ராசா, இந்துக்களை தீண்டத்தகாதவா்கள் என்பதுபோல் மனம் புண்படும் வகையில் தேவையற்ற வாா்த்தைகளை உபயோகித்து பேசினாா். சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து குழப்பம் விளைவித்தாா்.

    ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் இந்துக்களின் மனதைப் புண்படுத்திய ஆ.ராசா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை தலைவா் அலுவலகத்தில் பா.ஜ.க நிா்வாகிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆ.ராசாவின் மக்களவை உறுப்பினா் பதவியை பறிக்கும் வகை யிலான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் மனு அளிப்பதற்கான பணிகளை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செய்து வருகிறாா்.

    தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. நிா்வாகிகள், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவல கத்தில் ஆ, ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுக்களை அளித்து வருகின்றனா். இது தொடா்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து அவா் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போராடுவோம்*.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் வடிவேல், கல்வியாளா் ஆா். பிரணவ்குமாா் மற்றும் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    • போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.அப்போது கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண்டானா, பெரிய கடை வீதி, டி.எஸ். கார்னர் , ஐந்து சாலை சந்திப்பு மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆறு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன் பிறகு தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 11 பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முத்துவல்லி மற்றும் தலைவர்களிடத்தில் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முஸ்லிம் ஜமாத்தாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார். அதற்கு ஜமாத்தாரும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில் சுல்தானிய பள்ளிவாசல், மரக்கடை பள்ளிவாசல், கண்ணன் நகர் பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் போது தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போலீசார்கள் உடன் இருந்தனர்.

    • பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
    • 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

    தாராபுரம் :

    விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    இதில், பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா, பெரியகடை வீதி, டி.எஸ்.காா்னா் 5 சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.இதைத் தொடா்ந்து, தாராபுரம் சுற்றுவட்டார 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளா் ஞானசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    ×