search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணெய் வித்து"

    • மாநில எண்ணெய்வித்து பண்ணைநெய்வேலியில் உள்ளது.
    • ஆய்வு செய்து விதை உற்பத்தியினை பெருக்குவதற்காக அறிவுரைகள் வழங்கினர்.

    கடலூர்:

    பண்ருட்டி வட்டார மாநில எண்ணெய்வித்து பண்ணைநெய்வேலியில் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநில எண்ணை வித்து பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, எள் போன்ற விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து விதை உற்பத்தியினை பெருக்குவதற்காக அறிவுரைகள் வழங்கினார். நிலக்கடலை பயிரில் அமைக்கப்பட்டுள்ள வி.ஆர். 9, கோ 7 போன்ற ரகங்களின் விதை பண்ணைகளையும் எள் பயிரில் டி.எம்.வி. 7 மற்றும் வி.ஆர்.ஐ. 3 ரகங்களில் அமைக்கப்பட்டுள்ள விதைப் பணிகளையும் ஆய்வு செய்து உரமிடுதல் நுண் ஊட்டச்சத்து இடுதல் ஜிப்சம் இடுதல் மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் இறுகிய மண் உள்ள வயல்களில் உளி கலப்பை கொண்டு உழவு மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர்கள் கென்னடி ஜெபக்குமார், பிரேம் சாந்தி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் பார்த்தசாரதி, பிரேமலதா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஹரிஷ்குமார்,அனு ,உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நிலக்கடலை பயிரிடப்பட்டு 85.82 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளது.
    • நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் விலை முன்னறிவிப்பு திட்டத்தில் எண்ணெய் வித்துக்களு க்கான விலை முன்னறிவிப்பினை சந்தை நிலவரத்தின் அடிப்படை யில் வெளியிட்டுள்ளது.

    வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இரண்டாவது முன்கூட்டிய அறிவிப்பின் படி, இந்தியாவில் 2022-23ம் ஆண்டுக்கான நிலக்கடலை 60.15 லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 85.82 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை மற்றும் சந்தை ஆய்வுகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதன்படி அறுவடையின் போது ( மே-2023) தரமான நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால இறவை வரத்தை பொறுத்து நிலக்கடலை விலையில் சிறிய, ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    தமிழகத்தில் 0.52லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 0.34லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும். விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சித்திரை, ஆடி, கார்த்திகை, மாசி ஆகிய பட்டங்களில் எள் விதைக்கப்படுகிறது. சிவப்பு எள் எண்ணெய் உற்பத்திக்கும், கருப்பு எள் முக்கிய மிட்டாய் வகைகளில் பயன்படுத்தவும், வெள்ளை எள் ஏற்றுமதிக்கும் அதிகம் பயன்படுத்தப்ப டுகிறது. விலை முன்னறிவிப்பு குழு கடந்த 12 ஆண்டுகள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய எள் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.ஆய்வு முடிவுகளின் படி அறுவடையின் போது( மே -2023)தரமான எள் பண்ணை விலை கிலோவிற்கு 120 முதல் 125 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கூற ப்பட்ட சந்தை ஆலோசனையின் படி விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை த்துள்ளது. மேலும் விபரங்க ளுக்கு 0422-2431405/6611278/ 2450812 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பி.ஏ.பி., அமராவதி பாசனத்துக்கு முன் பரவலாக எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
    • அயல் மகரந்த சேர்க்கைக்காக விளைநிலங்களில் தேனீ பெட்டி வைக்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் கிணற்றுப்பாசனத்துக்கும், பி.ஏ.பி., அமராவதி பாசனத்துக்கு முன் பரவலாக எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.விலை வீழ்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக சூரியகாந்தி சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர்.

    தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு உரல்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், பாப்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி - பிப்ரவரி பயிரிடுவதற்கு ஏற்ற பருவமாகும்.வீரிய ரக விதைகளே இப்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. நோய்த்தாக்குதல் இச்சாகுபடியில், குறைந்தளவு இருந்தாலும் அறுவடை தருணத்தில், பறவைகளால் அதிக சேதம் ஏற்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்படுகிறது.

    மகரந்த சேர்க்கை பாதிப்பு காரணமாக பூவில், விதைகள் பிடிக்காமல் பதராக மாறுவதும் சாகுபடியில், முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே முன்பு அயல் மகரந்த சேர்க்கைக்காக விளைநிலங்களில் தேனீ பெட்டி வைக்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சூரியகாந்தி சாகுபடியில் ஏக்கருக்கு குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகிறது. ஏக்கருக்கு, 700 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.அறுவடைக்கு முன் பூக்களை பறவைகளிடமிருந்து பாதுகாப்பது மிகுந்த சிரமம் அளிக்கிறது. காலை, மாலையில் காவல் இருந்தாலும் சேதம் அதிகம் ஏற்படுகிறது. மகசூல் பாதிக்கும் போது விலையும் இல்லாததால் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை.விற்பனை சந்தையும் இல்லாததும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    ×