search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணெய் வித்துக்களுக்கான விலை - வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    எண்ணெய் வித்துக்களுக்கான விலை - வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு

    • நிலக்கடலை பயிரிடப்பட்டு 85.82 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளது.
    • நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் விலை முன்னறிவிப்பு திட்டத்தில் எண்ணெய் வித்துக்களு க்கான விலை முன்னறிவிப்பினை சந்தை நிலவரத்தின் அடிப்படை யில் வெளியிட்டுள்ளது.

    வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இரண்டாவது முன்கூட்டிய அறிவிப்பின் படி, இந்தியாவில் 2022-23ம் ஆண்டுக்கான நிலக்கடலை 60.15 லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 85.82 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை மற்றும் சந்தை ஆய்வுகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதன்படி அறுவடையின் போது ( மே-2023) தரமான நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால இறவை வரத்தை பொறுத்து நிலக்கடலை விலையில் சிறிய, ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    தமிழகத்தில் 0.52லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 0.34லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும். விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சித்திரை, ஆடி, கார்த்திகை, மாசி ஆகிய பட்டங்களில் எள் விதைக்கப்படுகிறது. சிவப்பு எள் எண்ணெய் உற்பத்திக்கும், கருப்பு எள் முக்கிய மிட்டாய் வகைகளில் பயன்படுத்தவும், வெள்ளை எள் ஏற்றுமதிக்கும் அதிகம் பயன்படுத்தப்ப டுகிறது. விலை முன்னறிவிப்பு குழு கடந்த 12 ஆண்டுகள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய எள் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.ஆய்வு முடிவுகளின் படி அறுவடையின் போது( மே -2023)தரமான எள் பண்ணை விலை கிலோவிற்கு 120 முதல் 125 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கூற ப்பட்ட சந்தை ஆலோசனையின் படி விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை த்துள்ளது. மேலும் விபரங்க ளுக்கு 0422-2431405/6611278/ 2450812 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×