எண்ணெய் வித்து பண்ணையில் வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு

மாநில எண்ணெய்வித்து பண்ணைநெய்வேலியில் உள்ளது.ஆய்வு செய்து விதை உற்பத்தியினை பெருக்குவதற்காக அறிவுரைகள் வழங்கினர்.
 பண்ருட்டி வட்டார மாநில எண்ணெய் வித்து பண்ணையில்வேளாண்மைதுறை இயக்குனர்அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
 பண்ருட்டி வட்டார மாநில எண்ணெய் வித்து பண்ணையில்வேளாண்மைதுறை இயக்குனர்அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
Published on

கடலூர்:

பண்ருட்டி வட்டார மாநில எண்ணெய்வித்து பண்ணைநெய்வேலியில் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநில எண்ணை வித்து பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, எள் போன்ற விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து விதை உற்பத்தியினை பெருக்குவதற்காக அறிவுரைகள் வழங்கினார். நிலக்கடலை பயிரில் அமைக்கப்பட்டுள்ள வி.ஆர். 9, கோ 7 போன்ற ரகங்களின் விதை பண்ணைகளையும் எள் பயிரில் டி.எம்.வி. 7 மற்றும் வி.ஆர்.ஐ. 3 ரகங்களில் அமைக்கப்பட்டுள்ள விதைப் பணிகளையும் ஆய்வு செய்து உரமிடுதல் நுண் ஊட்டச்சத்து இடுதல் ஜிப்சம் இடுதல் மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் இறுகிய மண் உள்ள வயல்களில் உளி கலப்பை கொண்டு உழவு மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர்கள் கென்னடி ஜெபக்குமார், பிரேம் சாந்தி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் பார்த்தசாரதி, பிரேமலதா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஹரிஷ்குமார்,அனு ,உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com