search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குனர் ஆய்வு"

    • மாநில எண்ணெய்வித்து பண்ணைநெய்வேலியில் உள்ளது.
    • ஆய்வு செய்து விதை உற்பத்தியினை பெருக்குவதற்காக அறிவுரைகள் வழங்கினர்.

    கடலூர்:

    பண்ருட்டி வட்டார மாநில எண்ணெய்வித்து பண்ணைநெய்வேலியில் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநில எண்ணை வித்து பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, எள் போன்ற விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து விதை உற்பத்தியினை பெருக்குவதற்காக அறிவுரைகள் வழங்கினார். நிலக்கடலை பயிரில் அமைக்கப்பட்டுள்ள வி.ஆர். 9, கோ 7 போன்ற ரகங்களின் விதை பண்ணைகளையும் எள் பயிரில் டி.எம்.வி. 7 மற்றும் வி.ஆர்.ஐ. 3 ரகங்களில் அமைக்கப்பட்டுள்ள விதைப் பணிகளையும் ஆய்வு செய்து உரமிடுதல் நுண் ஊட்டச்சத்து இடுதல் ஜிப்சம் இடுதல் மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் இறுகிய மண் உள்ள வயல்களில் உளி கலப்பை கொண்டு உழவு மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர்கள் கென்னடி ஜெபக்குமார், பிரேம் சாந்தி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் பார்த்தசாரதி, பிரேமலதா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஹரிஷ்குமார்,அனு ,உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • இயக்குனர் (பொது) பிரசாந்த், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பள்ளி கட்டிட மேம்பாட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

    ராசிபுரம்:

    சென்னை ஊரக வளர்ச்சி இயக்க கூடுதல் இயக்குனர் (பொது) பிரசாந்த், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்களுடன் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர், முத்துக்காளிப்பட்டி மற்றும் குருக்கபுரம் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பள்ளி கட்டிட மேம்பாட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் திட்ட இயக்குனர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் தமிழன்பன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவ

    லர்கள் பாஸ்கர் மற்றும்

    வனிதா, உதவி பொறியா ளர்கள் சிவக்குமார் மற்றும் நைனாமலை ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாசன நீர் ஆதாரத்திற்கு கிணறு தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி வழங்கினார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், சின்னகல்வராயன் மலை வடக்குநாடு ஊராட்சி, கும்பப்பாடி கிராமத்தில், 2021-22-ம் ஆண்டு, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தோட்டக்கலை துறையின் மூலம் தரிசு நிலத் தொகுப்பு கண்டறியப்பட்டது. தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் நீர் ஆதாரம் உருவாக்கி, தோட்டக்கலைத் துறை மூலம் அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. பாசன நீர் ஆதாரத்திற்கு கிணறு தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துறை இயக்குனர் பிருந்தாதேவி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்த

    னர்.

    சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்கு னர் சேலம் (நடவு பொருள்), பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோதை நாயகி, தோட்டக்கலை அலுவலர் ஜான்சி, உதவி தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார், மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி வழங்கினார்.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.
    • அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

    அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், கற்றல் திறனை அதிகப்ப டுத்தவும் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டமானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் சரளமாக எழுதவும், படிக்கவும் வைப்பது இப்பயிற்சியின் நோக்கமாகும்.

    இதற்காக பள்ளி கல்வித் துறையின் மூலம் 2-ம் கட்ட பயிற்சியானது தொட க்கநிலை வகுப்புகளைகையாளும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.

    அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    மேலும் மாணவர்க ளிடையே ஏற்படும் கற்றல் இடைவெளியை குறைத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்கள் அனைவரும் ஆடல், பாடல் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாக பாடங்களை போதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நாராயணன், விரிவுரை யாளர் முருகேசன், ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, வட்டார கல்வி அலுவலர்கள் சிவானந்தம், வனிதாராணி, சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • பயனாளிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.
    • ஊராட்சி செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் சமத்துவபுரம் பகுதியில் உள்ள புன ரமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் நாற்றங்கால் பண்ணை ஆகியவற்றை கூடுதல் இயக்குனர் ஆனந்த ராஜ் (ஊரக வளர்ச்சி) ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து கண்ணடஹள்ளி ஊராட்சியில் வாரச்சந்தை வளாக கட்டிடங்களையும், பொம்மேப்பள்ளி ஊராட்சியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடத்தையும் பார்வையிட்டார்.

    திட்ட இயக்குனர் மலர்விழி ( ஊரக வளர்ச்சி), செயற்பொறியாளர் மலர்வழி, மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர், ஒன்றிய உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி , ஊராட்சி செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சிறந்த தூய்மை கிராமத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சிறந்த தூய்மை கிராமமாக கோடநாடு ஊராட்சியை தேர்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடநாடு ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக கவனம் செலுத்தி முழுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மையான கிராமமாக விளங்கி வருகிறது.

    பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது. சுகாதார பணிகள் இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் சிறந்த தூய்மை கிராமமாக பரிந்துரைக்கப்பட்ட கோடநாடு கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அருண்மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முக்கிய பகுதிகள் தூய்மையாக உள்ளதா, குடியிருப்புகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு இருக்கிறதா மற்றும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், உதவி இயக்குனர் (ஊராட்சி) சாம் சாந்தகுமார், ஊராட்சி தலைவர் சுப்பி காரி, ஊராட்சி செயலர் சதீஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். சிறந்த தூய்மை கிராமமாக தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு ரூ.7 லட்சம் நிதி வழங்கி ஊக்குவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×