கும்பப்பாடி கிராமத்தில் தோட்டக்கலைத் துறை இயக்குனர் ஆய்வு

பாசன நீர் ஆதாரத்திற்கு கிணறு தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி வழங்கினார்.
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், சின்னகல்வராயன் மலை வடக்குநாடு ஊராட்சி, கும்பப்பாடி கிராமத்தில், 2021-22-ம் ஆண்டு, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தோட்டக்கலை துறையின் மூலம் தரிசு நிலத் தொகுப்பு கண்டறியப்பட்டது. தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் நீர் ஆதாரம் உருவாக்கி, தோட்டக்கலைத் துறை மூலம் அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. பாசன நீர் ஆதாரத்திற்கு கிணறு தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துறை இயக்குனர் பிருந்தாதேவி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்த

னர்.

சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்கு னர் சேலம் (நடவு பொருள்), பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோதை நாயகி, தோட்டக்கலை அலுவலர் ஜான்சி, உதவி தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார், மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com