ஊரக வளர்ச்சி இயக்க கூடுதல் இயக்குனர் ஆய்வு

இயக்குனர் (பொது) பிரசாந்த், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பள்ளி கட்டிட மேம்பாட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
முத்துக் காளிப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்த காட்சி.
முத்துக் காளிப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்த காட்சி.
Published on

ராசிபுரம்:

சென்னை ஊரக வளர்ச்சி இயக்க கூடுதல் இயக்குனர் (பொது) பிரசாந்த், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்களுடன் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், முத்துக்காளிப்பட்டி மற்றும் குருக்கபுரம் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பள்ளி கட்டிட மேம்பாட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் திட்ட இயக்குனர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் தமிழன்பன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவ

லர்கள் பாஸ்கர் மற்றும்

வனிதா, உதவி பொறியா ளர்கள் சிவக்குமார் மற்றும் நைனாமலை ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com