search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni News: Director Inspection"

    தேனி மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. பயிற்சி இயக்குனர் வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார்.
    தேனி:

    தேனி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நிர்வாக மேலாண்மை குழுவின் சார்பில்  மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டு பணிகளை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவராவ் ஆய்வு செய்தார்.

    அப்போது தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் தரப்படும் ஆய்வகங்கள், திறன் பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி பட்டறைகள், கணினி மூலம் கற்றுத்தரப்படும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.

    மேலும் ஐ.டி.ஐ வளாகத்தில் குடிநீர், கழிவறை, விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவை குறித்தும்  தொழிற்பயிற்சி நிர்வாகத்திடம் அவர் விரிவாக கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் வீரராகவராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
    தமிழகத்தில் உள்ள 91 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் தொழிற்பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர். இதில் பொறியியல் மற்றும் பொறியியல் சாராத துறைகளில் 80-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறினார்.

    மேலும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு தொழிற் பயிற்சிகளில்  இயந்திரவியல், ரோபோடிக்ஸ் உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இதற்காக ரூ.2 ஆயிரத்து 777 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதுபோல டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் உள்பட  மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் அதற்கான பயிற்சி வகுப்புகளும் தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மதுரை மண்டல இணை இயக்குனர் மகேஸ்வரன், நிர்வாக மேலாண்மை குழுவின் தலைவர் அரவிந்த், தேனி ஐ.டி.ஐ முதல்வர் சேகரன் மற்றும் தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
    ×