search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊடடி"

    • நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
    • காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.

    ஊட்டி  

    நேபாளத்தை சேர்ந்தவர் ரமேஷ் பகதூர். (வயது 42)/இவர் தற்போது நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக கிளிப் ஹவுஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டெருமை அவரை தாக்க முயன்றது. காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் காட்டெருமை அவரை விடாமல் துரத்திச் சென்று முட்டி வீசியது.

    இதில் அவர் மார்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி யாரேனும் மதுவை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனரா? என்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் எஸ்.கைகாட்டியை சேர்ந்த நந்தகுமார்(43) என்பதும், மது விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 12 மது பாட்டில்கள் இருந்ததும். அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×