search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமையாளர் பலி"

    • திடீரென ஒரு வழிபாதையில் திரும்பிய டாரஸ் லாரி ஒன்று குமார் மீது மோதியது.
    • திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மெயின் ரோடு ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 52). இவர் கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ., மருத்துவமனை அருகே காஜா பட்டன் நிறுவனம் நடத்தி வந்தார். இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 11 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அருகே நிறுவனம் தொடர்பான வேலையை முடித்துக் கொண்டு டைமண்ட் தியேட்டர் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு வழிபாதையில் திரும்பிய டாரஸ் லாரி ஒன்று குமார் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதனைப் பார்த்த லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேந்திரன் வயது (64). ஓட்டல் உரிமையாளர் இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ரோட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார்.
    • அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோமுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (64).

    ஓட்டல் உரிமையாளர்

    இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ேராட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.

    அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலை உள்பட பல இடங்களில் படுகாயம் அடைந்தார்.

    பரிதாப சாவு

    அவரை மீட்டு அந்த பகுதியினர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்ககாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சென்றுள்ளார்
    • கவின் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமா மோதியது.

    சென்னிமலை, 

    சென்னிமலை அடுத்த ஓட்டப்பாறை ஊத்துக்குளி ரோடு, செந்தூர் கார்டன் பகுதிளைய சேர்ந்தவர் துரைச்சாமி (50) இவர் சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு தனது மொபட்டில் செந்தூர் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சென்றுள்ளார்.

    செந்தூர் கார்டன் பிரிவு அருகே திரும்பும் போது சென்னிமலை அடுத்த வாய்ப்பாடி, சுள்ளி மேடு பகுதியைச் சேர்ந்த கவின் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமா மோதியது.

    இதில் கீழே விழுந்த துரைசாமி தலையில் பலத்த அடிபட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது55).இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவரது மனைவி சந்திரா(50).இவர்களுக்கு என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும், ராஜ்குமார் என்ற மகனும் உள்ளனர்.நேற்று மாலை சந்திராவும், பொன்னுசாமியும் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க ஆட்டோவில் சென்றனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும், ஆட்டோவில் வீட்டிற்கு வந்தனர்.

    ஆட்டோ தொண்டா–முத்தூர் சாலையில் உள்ள யாவி அடுக்குமாடி குடியிருப்பு பகுதி அருகே வந்தது. அப்போது எதிரே தொண்டாமுத்தூரில் இருந்து, கவுண்ட–ம்பாளையம் நோக்கி காய்கறி ஏற்றி கொண்டு மினி லாரி வந்தது.

    எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த மினிலாரி, பொன்னுசாமியின் ஆட்டோமீது பயங்கரமாக மோதியது. இதில் கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.இதில் பொன்னுசாமி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். அவரது மனைவி சந்திரா மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பொன்னுசாமி மகள் நந்தினி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த பொங்கல் திருவிழா அன்று இவரது மகன் ராஜ்குமார் விபத்தில் உயிரிழந்தார். அதன் சோகம் முடிவதற்குள் தந்தையும் உயிரிழந்ததும் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே வடவள்ளி பிரிவில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் அதி வேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே இந்த சாலையில் தடுப்புகள் அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×