மொபட் மோதி பேக்கரி கடை உரிமையாளர் பலி

தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சென்றுள்ளார் கவின் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமா மோதியது.
மொபட் மோதி பேக்கரி கடை உரிமையாளர் பலி
Published on

சென்னிமலை, 

சென்னிமலை அடுத்த ஓட்டப்பாறை ஊத்துக்குளி ரோடு, செந்தூர் கார்டன் பகுதிளைய சேர்ந்தவர் துரைச்சாமி (50) இவர் சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார்.

இவர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு தனது மொபட்டில் செந்தூர் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சென்றுள்ளார்.

செந்தூர் கார்டன் பிரிவு அருகே திரும்பும் போது சென்னிமலை அடுத்த வாய்ப்பாடி, சுள்ளி மேடு பகுதியைச் சேர்ந்த கவின் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமா மோதியது.

இதில் கீழே விழுந்த துரைசாமி தலையில் பலத்த அடிபட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com