அயோத்தியாப்பட்டணத்தில் இன்று அதிகாலை விபத்துசரக்கு வாகனம் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

ராஜேந்திரன் வயது (64). ஓட்டல் உரிமையாளர் இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ரோட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார்.அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.
அயோத்தியாப்பட்டணத்தில் இன்று அதிகாலை விபத்துசரக்கு வாகனம் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோமுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (64).

ஓட்டல் உரிமையாளர்

இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ேராட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.

அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலை உள்பட பல இடங்களில் படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

அவரை மீட்டு அந்த பகுதியினர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்ககாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com