search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈபிஎஸ்"

    • அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை கட்சியில் இருநது நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் கூறினார். பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார்.
    • பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. தனது கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது ஒருபுறமிருக்க ஏற்கனவே அறிவித்தபடி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, "பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார்'' என்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றும் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கபப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
    • கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என நீதிபதி கேள்வி

    சென்னை:

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. பின்னர் விசாரணை தொடங்கியது.

    தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு என்றும், இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர் பல கருத்துக்களை முன்வைத்தார்.

    பொதுக்குழு கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்கக் கூடாது என்றும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். கட்சி நலனுக்காக வழக்கு தொடுத்திருப்பதாக கூறும் ஓபிஎஸ் தன்னையே எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார்.

    கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படவேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டடார். வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.

    • அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
    • அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை:

    கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அணியினர் தெரிவித்துள்ளனர்.

    அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் அணியில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

    கட்சியின் செயற்குழு, பொதுக்குழு முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது.

    எனவே பொதுக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
    • உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்பு.

    அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்து அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஜூலை 11-ல் பொதுக்குழு கூடும் என அறிவித்தும் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கையெழுத்திட்டு ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்க்கு எதிரான மனு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
    • அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

    • ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நேற்றிரவு செய்யப்பட்ட மேல் முறையீட்டில் விடிய விடிய விசாரணை நடந்தது.
    • நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பைக் கேட்டதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இரவு உத்தரவிட்டது.

    இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்ததை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, நீதிபதி துரைசாமி வசிக்கும் அண்ணாநகரில் இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

    விடிய விடிய நடைபெற்ற விசாரணையின் முடிவில், அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

    இந்நிலையில், நீதிபதிகள் தீர்ப்பைக் கேட்டதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கிரீன்வேஸ் சாலையில் திரண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீர்ப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விசாரணை நடைபெற்றது.
    • விசாரணை நடைபெறும் நீதிபதி வீட்டின் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த

    மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

    சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் விசாரணை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயண் ஆஜராகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகின்றனர்.

    இந்நிலையில், விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

    விசாரணை நடைபெற்ற நீதிபதி வீட்டின் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
    • அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட இரு நபர் அமர்வில் நள்ளிரவில் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஓபிஎஸ் வீட்டின் அருகே ஒட்டப்பட்டிருந்த ஈபிஎஸ் போஸ்டர்களுக்கு தீ வைத்தனர். மேலும், ஈபிஎஸ் ஆதரவு போஸ்டர்களை எரித்ததால் பரபாப்பு ஏற்பட்டது.

    • பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

    நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். இந்த பர

    இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 7 அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு செல்லாத நிலையில், இரு அணிகளுக்கு இடையே மீண்டும் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ADMK #EPS #OPS
    பெரியகுளம்:

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் துணை முதல்வராக தற்போது இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு சசிகலா குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தார்.

    கடந்த சில நாட்களாக அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் விடுக்கப்பட வில்லை என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கொடைக்கானல் மலர் கண்காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் என்று புறக்கணித்தார்.

    கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடந்தால் ஓ.பன்னீர்செல்வம் தவறாமல் பங்கேற்று விடுவார். ஆனால் இந்த ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் கொடைக்கானல் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்தார். அப்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இன்று காலைதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். அப்போது எடப்பாடி அணியினர் வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோட்டில் அவரை வழியனுப்பி வைக்க திரண்டு இருந்தனர். ஆனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை.

    இது குறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறுகையில் இதுவரை 7 அரசு விழாக்கள் நடந்து முடிந்துள்ளது. ஆனால், துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அந்த விழாக்களுக்கு அவரும் செல்லவில்லை என்றனர்.
    ×