search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் போர்"

    • டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    புதுடெல்லி:

    போர் நடந்து வரும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்டு வர ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சிறப்பு விமானங்கள் அனுப்பி அவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.

    இந்தியர்களை மீட்பதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து டெல்அவிவ் சென்றது. இந்த விமானம் நேற்று நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது.

    ஆனால் டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பின் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது.
    • காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

    இதனிடையே போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வந்தனர்.

    இந்நிலையில் தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காசாவுக்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய இஸ்ரேலின் முடிவுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    • புதுடெல்லி வந்த 49 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.
    • 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

    சென்னை:

    இஸ்ரேலில் இருந்து இதுவரை 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

    இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில், இதுவரை இரண்டு கட்டங்களாக புதுடெல்லி வந்த ௪௯ தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இஸ்ரேலில் இருந்து இரண்டு விமானங்களில் புதுடெல்லி வந்தடைந்த 49 தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசினால் விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 32 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 9 தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

    சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்களால் வரவேற்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுவரை, இஸ்ரேலில் இருந்து 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
    • மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி முதல் தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், காசாவில் மோதலின் முதல் ஏழு நாட்களில் இதுவுரை 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலியட் டூமா கூறுகையில்," காசாவில் நடந்த போரின் முதல் ஏழு நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
    • லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் இன்று 9வது நாளாக நீடித்து வருகிறது.

    கடந்த 7-ம்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேலிய வடக்கு எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

    லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

    • டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.
    • இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது

    புதுடெல்லி:

    இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன் தினம் காலை டெல்லி வந்தடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் நேற்று மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2வது மீட்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்தடைந்தது.

    இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி கவுஷல் கிஷோர், "பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புடன், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமக்கள் இங்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி வந்ததும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

    இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது

    • இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
    • ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசினார். அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாடிய நெதன்யாகு, 'அடுத்தகட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

    • மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொதுமக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

    எனவே மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அருகில் உள்ள எகிப்து நாட்டிற்குள்தான் செல்ல வேண்டும்.

    இந்த நாட்டிற்குள் செல்ல ஒரே வழி தென்காசாவில் உள்ள ரஃபா கிராஸிங் எனும் பாதை ஆகும், அதனையும் இஸ்ரேல் மூடிவிட்டதாகவும், இனிமேல் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் இஸ்ரேல் அனுமதி பெற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் எங்களை தொடர்பு கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    • கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு.
    • தற்போதைய சூழ்நிலையில் ரத்தம் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்பதே ரஷியாவின் குறிக்கோள்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கின்றனர்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காசா முற்றுகை பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அங்கு ஒரு சொட்டு தண்ணீரோ, வெளிச்சமோ இருக்காது என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.

    இந்நிலையில் இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும் காசா அமைப்புக்கு ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் அவர், "கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வேண்டும்.

    தற்போதைய சூழ்நிலையில் ரத்தம் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்பதே ரஷியாவின் குறிக்கோள்.

    அமைதி திரும்ப அனைத்து வழிகளிலும் ஒருங்கிணைப்பு வேலைகளை ரஷியா மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை.
    • ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது.

    இந்நிலையில், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ ஆகிய 2 விமான நிலையங்கள் மீது இஸ்ரோ வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினரை மீட்க இங்கிலாந்து விமானம் அனுப்புகிறது.

    மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமான படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும், காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

    ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உள்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

    உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 லட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.

    இதையடுத்து, "உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து, "இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இனி தரைவழி தாக்குதலும் நடத்தப்படக்கூடும்" என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • போர் நீடிப்பதால் இவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
    • இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் சுமார் 7,000 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

    திருவனந்தபுரம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் சுமார் 7,000 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு போர் நீடிப்பதால் இவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கேரளாவில் உள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். எனவே மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×