search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா நெதர்லாந்து போட்டி"

    • 2015ல் டி வில்லியர்ஸ் அடித்த 58 சிக்சர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது
    • 2019ல் மோர்கன் அடித்த 22 சிக்சர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது

    இந்தியாவில் அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் இதுவரை இந்தியா ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் ரசிகர்கள் உற்சாகம் அடையும் அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறது. இத்தொடரின் இறுதி போட்டி, நவம்பர் 19 அன்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதுவரை பேட்டிங்க், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து அம்சங்களிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக  செயல்பட்டு வருவதால், இந்தியா கோப்பையை வெல்வது எளிது என நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் போட்டிகளை கண்டு வருகின்றனர்.

    இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட இந்திய வீரர்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

    நவம்பர் 12 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து நெதர்லாந்திற்கு 411 என இலக்கு நிர்ணயித்தனர்.

    இதில் களமிறங்கிய இந்திய கேப்டனும் முன்னணி வீரருமான ரோகித் சர்மா, 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 54 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

    தனது 61 ரன் குவிப்பின் போது ரோகித் சர்மா 2 சாதனைகளை நிகழ்த்தினார்.

    ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு வருட காலகட்டத்தில் ஒரு வீரர் அடிக்கும் சிக்சர்களுக்கான கணக்கெடுப்பில், ரோகித், இதுவரை 60 சிக்சர்களை அடித்துள்ளார். இதுவரை 2015ல் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் அடித்திருந்த 58 சிக்சர்கள்தான் அதிக எண்ணிக்கைக்கான சாதனையாக இருந்து வந்தது. ரோகித் அந்த சாதனையை முறியடித்தார்.

    இது மட்டுமின்றி மற்றொரு சாதனையையும் ரோகித் புரிந்தார்.

    ஐசிசி உலக கோப்பைக்கான ஒரு போட்டி தொடரின் போது, ஒரு அணியின் கேப்டன் அடிக்கும் அதிக சிக்சர்கள் எண்ணிக்கைக்கான கணக்கெடுப்பில், 24 சிக்சர்கள் அடித்து ரோகித் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இயான் மோர்கன் அடித்த 22 சிக்சர்கள்தான் சாதனையாக இருந்து வந்தது. ரோகித் அந்த சாதனையையும் முறியடித்தார்.

    இந்தியாவிற்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளதால் ரோகித்தின் சிக்சர் கணக்குகளும், அவரது சாதனைகளும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

    • முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்தார்
    • 2008ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கோலி ஏலத்தில் தேர்வானார்

    இந்தியாவில், அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் பரபரப்பாக நடைபெறுகிறது.

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த போட்டித்தொடரில், தற்போது நடைபெறுவது 13-வது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

    இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

    இன்று கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் முக்கியமான போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், விராட் கோலி அடித்த 49 சதங்களை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அந்த அரங்கிற்கு செல்லும் வழி நெடுக கோலியின் முதல் சதத்தில் இருந்து அவரது 49-வது சதங்களையும் குறிப்பிடும் விதமாக 49 கட்-அவுட்களை வைத்துள்ளனர்.

    இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், விராட் கோலி.

    கடந்த 2008ல், ஐ.பி.எல். (IPL) 20 ஓவர்கள் போட்டிக்கான அணிகளில், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இவர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து கோலிக்கு கர்நாடகாவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×