search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து தொடர்"

    • துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.
    • நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளேர் திக்னர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இந்தூர்:

    இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்த இருவரும் சதம் விளாசி அசத்தினர். ரோகித் சர்மா 101 ரன்களும், ஷுப்மன் கில் 112 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

    இஷான் கிஷன் 17 ரன்கள், விராட் கோலி 36 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 14 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 54 ரன்கள் விளாசினார். ஷர்துல் தாகூர் 25 ரன்கள், குல்தீப் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது.

    நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளேர் திக்னர் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.

    • இந்தியா, நியூசிலாந்து இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
    • இன்றைய போட்டி இந்தூரில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா,நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.

    சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும், பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் போட்டியில் மட்டும் தாக்குப்பிடித்து ஆடியது. 2-வது ஆட்டத்தில் 108 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்த அணி இன்றைய போட்டியில் வென்று ஆறுதல் பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் இன்று மோதுவது 116-வது போட்டியாகும். இதுவரை நடந்த 115 ஆட்டத்தில் இந்தியா 57-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றன. 7 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி 'டை' ஆனது. இன்றைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    • இரு அணிகளும் நாளை மோதுவது 116-வது போட்டியாகும்.
    • இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.

    இந்தூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்டிலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை நடக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும், பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் போட்டியில் மட்டும் தாக்குப்பிடித்து ஆடியது. 2-வது ஆட்டத்தில் 108 ரன்னில் சுருண்டு முற்றிலும் சரண்டர் ஆனது. அந்த அணி நாளைய போட்டியில் வென்று ஆறுதல் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 116-வது போட்டியாகும். இதுவரை நடந்த 115 ஆட்டத்தில் இந்தியா 57-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றன. 7 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி 'டை' ஆனது.

    நாளைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.
    • இந்த போட்டிக்கு முன்னர் நியூசிலாந்து அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 108 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்தியா 20.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிவடைந்ததும் ஒருநாள் அணிகளுக்கான கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையின் படி இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. 4வது இடத்தில் ஆஸ்திரேலியா (112 புள்ளிகள்), 5வது இடத்தில் பாகிஸ்தான் (106 புள்ளிகள்) அணிகள் உள்ளன.

    6 முதல் 10 இடங்களில் தென் ஆப்பிரிக்கா (100 புள்ளிகள்), வங்காளதேசம் (95 புள்ளிகள்), இலங்கை (88 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (71 புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ் (71 புள்ளிகள்) ஆகிய அணிகள் உள்ளன.

    இந்த போட்டிக்கு முன்னர் நியூசிலாந்து 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்தியா 111 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ராய்ப்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரண்டாவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே தடுமாறியது. இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    பிரேஸ்வெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். எனினும், நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்து அடித்தளம் அமைக்க, ஷுப்மன் கில், விராட் கோலி இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். அணியின் ஸ்கோர் 98 ஆக இருந்தபோது விராட் கோலி (11 ரன்) ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து ஆடிய ஷுப்மன் கில் 21வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். அவர் 40 ரன்களுடனும், இஷான் கிஷன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி உள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டி 24ம் தேதி இந்தூரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

    • நியூசிலாந்து அணி 10.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி ஓவரில் பின் ஆலென் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் 20 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிராஜ் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், டேரில் மிட்செல் (1), டெவோன் கான்வே (7), டாம் லாதம் (1) என்று வரிசையாக வெளியேறினர். நியூசிலாந்து அணி 10.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் நியூசிலாந்து அணி குறைந்த ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது.

    கடந்த 2005-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 5 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.

    இதே போன்று கடந்த 1997 ஆம் ஆண்டு கொழும்பு மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் அதிக பட்சமாக 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ராய்ப்பூர்:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாக சில வினாடிகள் யோசித்த பின்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதாவது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த பின் ஆலெனை ஷமி முதல் ஓவரிலேயே வீழ்த்தினார்.

    இதையடுத்து களம் புகுந்த நிகோல்ஸ், டேரில் மிட்செல், கேப்டன் லதாம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரக் கான்வே அகியோரும் இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதனையடுத்து கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய பிரேஸ்வெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஆனால் நியூசிலாந்து அணி 56 ரன்கள் எடுத்த போது பிரேஸ்வெல் அவுட் ஆனார். அடுத்து பிலிப்ஸ் - சாட்னர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை பாண்ட்யா பிரித்தார்.

    சாட்னர் 27 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் நீண்ட நேரம் ஆடி கொண்டிருந்த பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெர்குசனும் அவர் பந்தில் வெளியேறினார். கடைசியில் டிக்னர் 2 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • இந்த மைதானத்தில் இதுதான் முதல் சர்வதேச போட்டி ஆகும்.
    • நாங்களும் பௌலிங் தான் தேர்வு செய்திருந்தோம் என நியூசிலாந்து கேப்டன் கூறினார்.

    நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தில் இதுதான் முதல் சர்வதேச போட்டி ஆகும். இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்யவா, பீல்டிங் தேர்வு செய்யவா என்று கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு யோசித்துள்ளார். அதன் பிறகு சிரித்துக் கொண்டே பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    நியூசிலாந்து கேப்டனும் அவர்களுக்கு பின்னாடி பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய வீரர்களும் சிரிப்படி இந்த சம்பவத்தை பார்த்தக் கொண்டிருந்தனர்.


    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில், நாங்களும் பௌலிங் தான் தேர்வு செய்தோம். இது தான் முதல் சர்வதேச போட்டி என்பதால், விக்கெட் எப்படி விழும் என்பது குறித்து தெரியாது. கடந்த போட்டி சிறப்பாக இருந்தது. கடந்த போட்டியைப் போன்று இந்தப் போட்டியிலும் பேட்டிங் இருக்கும் என்று நம்புகிறேன். நாங்களும் அதே அணியுடன் தான் களமிறங்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

    நியூசிலாந்து: பின் ஆலென், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டெரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி சிப்லே, லக்கி பெர்குசன், பிளைர் டக்னர்.

    • முதல் ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

    ராய்ப்பூர்:

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
    • 2வது ஒருநாள் போட்டி இன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது.

    ராய்ப்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றது. 350 ரன் இலக்கை நெருங்கி வந்த நியூசிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது. இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.

    • மூன்று ஓவர்களை குறிப்பிட்ட நேர இலக்கிற்குள் வீசவில்லை என தெரியவந்தது.
    • அபராதத்தை ஏற்றுக்கொண்டதால் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படாது.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், முதல் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி சம்பளத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கள நடுவர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து போட்டிக்கான நேரம் குறித்து ஆய்வு செய்ததில், மூன்று ஓவர்களை குறிப்பிட்ட நேர இலக்கிற்குள் வீசவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, போட்டி சம்பளத்தில் இருந்து ஒரு ஓவருக்கு தலா 20 சதவீதம் வீதம் மூன்று ஓவர்களுக்கும் 60 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.

    மெதுவாக பந்துவீசியது தொடர்பான குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒப்புக்கொண்டதுடன், அபராதத்தையும் ஏற்றுக்கொண்டார். எனவே மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படாது. 

    • இந்திய அணி தரப்பில் ஒருநாள் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
    • ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார்.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். அவர் 149 பந்துகளில் 9 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் குவித்தார்.

    ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார். அதேபோல் இந்திய அணியும் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்திய அணி தரப்பில் ஒருநாள் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

    மேலும், அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்தவரும் இந்திய வீரர் தான். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 265 ரன்கள் எடுத்துள்ளார்.

    இரட்டை சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர்(200), சேவாக்(219), இஷான் கிஷன்(210), ரோகித் சர்மா(209)(208)(265) ஆகியோர் வரிசையில் கில் இணைந்தார்.

    இந்திய வீரர்கள் தவிர நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (237), வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (215), பாகிஸ்தான் வீரர் ஃபஹர் ஜமான் (210) ஆகியோர் மட்டுமே இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    ×