search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா தொடர்"

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என கும்ப்ளே முன்னதாகவே கணித்தது அப்படியே நடந்துள்ளது #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேயிடம் கிரிக்கெட் இணையதளம் ஒன்று இந்த போட்டி தொடர் முடிவு எப்படி? இருக்கும் என்று கேள்வி எழுப்பியது.

    அதற்கு இந்திய அணி டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் மழையால் போட்டி எதுவும் பாதிக்கப்படுமா? என்றதற்கு, மழைக்காலம் என்பதால் போட்டி பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அவர் கணித்து சொன்ன மாதிரியே போட்டி தொடர் முடிவு மட்டுமின்றி, மழையால் ஒரு டெஸ்ட் (சிட்னி டெஸ்ட்) போட்டியும் பாதித்தது. இதனால் கும்ப்ளேயின் கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் கும்ப்ளேவை பாராட்டி உள்ளனர்.



    இதற்கு நேர் மாறாக இந்த போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்து கூறியது பொய்த்து போனது. அவர் ஆஸ்திரேலிய அணி 2-1 என்று தொடரை வெல்லும் என்றும், விராட் கோலியை விட ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அதிக ரன் குவிப்பார் என்று ஆருடம் தெரிவித்து இருந்தார். அவர் கூறிய இரண்டு விஷயமும் பலிக்கவில்லை.
    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் அபாரமாக பந்து வீசிய பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். மொத்தம் 157 ஓவர்கள் வீசிய பும்ரா 21 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது பந்து வீச்சு சராசரி 17 ஆகும்.

    பும்ராவின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்தும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சித்தார்த் கவுலும் இடம் பெற்றுள்ளார்.



    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 12-ம்தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஜனவரி 15-ம் தேதி 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், 18-ம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.

    அத்துடன் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
    இந்தியாவிற்கு எதிரான தொடரில் குறிப்பிடத் தகுந்த வகையில் பந்து வீசாத மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது ஆச்சர்யம் அளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. இத்தொடர் தொடங்குவதற்கு முன் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலியா பேட்டிங்கில் திணறும். ஆனால், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகிய உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை சீர்குலைப்பார்கள். இதனால் ஆஸ்திரேலியா தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் கருத்துக் கூறினார்கள்.

    ஆனால் மிட்செல் ஸ்டார்க் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிட்னி டெஸ்டில் ஒரு மெய்டன் ஓவர் கூட வீச முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. 7 இன்னிங்சில் 13 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார். இதனால அவர் மீது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் விமர்சனம் வைத்தனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஸ்டார்க் மீதான விமர்சனம் அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஸ்டார்க் மிகவும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர். அவர் சரியான மனநிலையை பெற்றுள்ளார். தற்போது வரை அவர் ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அவரை நோக்கி சிறிய அளவிலாள விமர்சனம் வைக்கப்படுவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

    அவர் உங்களுடைய நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருந்தால், அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர் மீது நெருக்கடியை திணிக்கக்கூடாது. ஏனென்றால், திறமையான மற்றும் வெற்றியை தேடிக்கொடுக்கக் கூடிய இதுபோன்ற பந்து வீச்சாளர்களை நீங்கள் இழக்க விரும்பமாட்டீர்கள்’’ என்றார்.
    ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக டோனி, ரோகித் சர்மா, கேதர் ஜாதவ் உள்பட சில வீரர்கள் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலை அடைந்தது. இன்றுடன் முடிவடைந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை பெற்றது.

    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத சில வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர். ரோகித் சர்மா தனது குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா வந்தார்.

    எம்எஸ் டோனி, கேதர் ஜாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்பட ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்தவர்கள். இவர்கள் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார்கள். கேதர் ஜாதவ் தனது டுவிட்டர் பக்கத்திலும், கலீல் அகமது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புறப்படும்போது எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளனர்.



    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), 3. கேல் எல் ராகுல், 4. ஷிகர் தவான், 5. அம்பதி ராயுடு, 6. தினேஷ் கார்த்திக், 7. கேதர் ஜாதவ், 8. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 9. ஹர்திக் பாண்டியா, 10. குல்தீப் யாதவ், 11. சாஹல், 12. ஜடேஜா, 13. புவனேஸ்வர் குமார், 14. பும்ரா, 15. கலீல் அகமது, 16. முகமது ஷமி.
    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காத கவுல்டர் நைல் தேர்வாளர்கள் மீது கடுமையாக சாடியுள்ளார். #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையடைந்தது. இன்றுடன் முடிவடைந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது.

    இதனைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி சிட்னியில் மூன்று போட்டிகள் கொணட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. 2-வது போட்டி 15-ந்தேதி அடிலெய்டிலும், 3-வது ஒருநாள் போட்டி 18-ந்தேதி மெல்போர்னிலும் நடக்கிறது. மூன்று ஆட்டங்களும் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது.

    ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளரான நாதன் கவுல்டர் நைல் இடம்பெறவில்லை. அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுவதால் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறிப்படுகிறது. இந்நிலையில் தேர்வாளர்கள் மீது நாதன் கவுல்டர் நைல் கடுமையாக சாடியுள்ளார்.

    இதுகுறித்து நாதன் கவுல்டர் நைல் கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் அணியில் சேர்க்கப்படாத செய்தியை சிறந்ததாக பார்க்கவில்லை. தேர்வாளர்களுக்கும் எனக்கும் இடையிலான கம்யூனிகேசன் மிகவும் மோசமானது. நான் இதுகுறித்து யாரிடம் விவாதிக்க போவதில்லை.

    ஆனால், ஒருபோதும் எனக்கு காயம் காரணமாக வலி அதிகமாக இருக்கிறது. அதனால் விளையாட முடியாது என்று கூறியது கிடையாது. நான் காயத்திற்காக இன்னும் ஸ்கேன் எடுத்தது கிடையாது. நான் ஸ்கேன் எடுத்து எனக்கு என்ன பிரச்சனை உள்ளது என்பதை பார்ப்பதற்கு முன்பே அணியை தேர்வு செய்துவிட்டார்கள்’’ என்றார்.
    1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதுபோல் இந்த வெற்றி மிகப்பெரியது என்று ரவி சாஸ்திரி சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகவும், 72 வருடத்திற்குப்பிறகும் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது.

    தொடரை கைப்பற்றிய பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியதை போல் இந்த தொடரை கைப்பற்றியது பெரிய சாதனை அல்லது அதைவிட மிகப்பெரிய சாதனை’’ என்றார்.

    பாகிஸ்தானை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும்போது இந்திய அணியில் ரவி சாஸ்திரி இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முதலில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகவும், 72 வருடத்திற்குப்பிறகும் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது.

    மேலும் இதுவரை ஆசிய அணிகள் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம்) 29 கேப்டன் தலைமையில் ஆஸ்திரேலியா சென்று விளையாடியுள்ளது. இதில் விராட் கோலி மட்டுமே தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்மித் மற்றும் வார்னர் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல என்று கவாஸ்கர் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சிட்னி டெஸ்டில் இரண்டு நாட்கள் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

    இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. சிலர் இந்திய அணியை பாராட்டுவதைவிட, ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘இருவரும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல’’ என்று கவாஸ்கார் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் விளையாடியது இந்தியாவின் தவறல்ல. இருவரின் தடையை அவர்களால் குறைத்திருக்க முடியும். ஆனால் ஒரு வருடத்தடை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு நல்லது என்று நினைத்துள்ளனர். கிரிக்கெட் போட்டியை தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் வீரர்களுக்கு இது உதாரணமாக இருக்கும் என்பதால் இதை எடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனையைப் படைத்துள்ளது.’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AUSvIND #RamnathKovind
    புதுடெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

    72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள். பேட்டிங், பந்துவீச்சு என இந்திய அணியின் ஒட்டுமொத்த சிறப்பான பங்களிப்பை கண்டு பெருமை கொள்கிறோம் என தனது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். #AUSvIND #RamnathKovind
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 

    நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். #AUSvIND

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது. #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உணவு இடைவேளை முடிந்து போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மழை குறுக்கிடும் பட்சத்தில் போட்டி  டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. #AUSvIND

    சிட்னி டெஸ்டில் கடைசி நாள் முழுவதும் பேட்டிங் செய்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்பதால் நெருக்கடியில் உள்ளது ஆஸ்திரேலியா. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முதல் செசன் மழையால் முழுவதும் தடைபட்டது. உணவு இடைவேளைக்குப்பிறகு 2-வது செசனில் இந்தியா சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்தது. தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

    தற்போது வரை ஆஸ்திரேலியா 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை ஒருநாள் முழுவதும் உள்ளது. மழை பெய்யாமல் இருந்தால் ஆஸ்திரேலியா தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டும். அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி இந்தியா வெற்றி பெற முயற்சி செய்யும்.

    இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைவதற்கான சாத்தியமே இல்லை. ஏற்கனவே 2-1 என முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது.
    ×