search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்வார்திருநகர்"

    வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரில் பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர் ஸ்ரீலட்சுமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர். விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி இரவு சுந்தர், குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் சுந்தர் வீட்டின் மீது 2 மண்எண்ணை குண்டுகளை வீசி தப்பி சென்றுவிட்டனர்.

    வீட்டின் முன்பகுதி மற்றும் ஜன்னல் மீது விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சுந்தர், குடும்பத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமி‌ஷனர் ஞானசுந்தர், இன்ஸ்பெக்டர் அழகு ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மண்எண்ணை குண்டுகளை வீசியது விருகம்பாக்கம், மேட்டுக்குப்பத்தை சேர்ந்த தக்காளி பிரபா மற்றும் கூட்டாளிகள் என்பது தெரிந்தது.

    இதையடுத்து மேட்டுக்குப்பத்தை சேர்ந்த வெள்ளை மணி என்கிற வினோத், கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    முக்கிய குற்றவாளியான தக்காளி பிரபா, கூட்டாளிகள் சரவணன், புறா முத்து, பார்த்திபன் ஆகிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த அன்று காலை பெட்ரோல் பங்க்கில் உள்ள அலுவலகத்தில் தக்காளி பிரபா கோஷ்டியினர் செல்போன் திருடி உள்ளனர்.

    இது தொடர்பாக சுந்தர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த கோபத்தில் அவரது வீட்டில் மண்எண்ணை குண்டுகளை தக்காளி பிரபா கோஷ்டியினர் வீசி இருப்பது தெரிந்தது. #Tamilnews
    சென்னை ஆழ்வார் திருநகரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீசப்பட்டது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    ஆழ்வார் திருநகர், ஸ்ரீ லட்சுமி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் விருகம்பாக்கம் இளங்கோ நகரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு 12 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுந்தர் வீட்டின் மீது இரண்டு மண்எண்ணை குண்டுகளை வீசினர்.

    இதில் மண்எண்ணை குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்த ஜன்னல் திரை தீயில் எரிந்து நாசமானது. சத்தம் கேட்டு சுந்தர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்தனர்.

    உடனே மண்எண்ணை குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் வரும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    நேற்று காலை பெட்ரோல் பங்கிற்கு வந்த 2 வாலிபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து செல்போனை திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசில் சுந்தர் புகார் செய்திருந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் சுந்தர் வீட்டில் மண்எண்ணை குண்டுகளை வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மண்எண்ணை குண்டுகளை வீசியது அதே பகுதியை சேர்ந்த ரவுடி தக்காளி என்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். #Tamilnews
    ×